Home நிகழ்வுகள் உலகம் சீனாவில் புதிய வைரஸ்: மூன்று மடங்கு அதிகரித்துள்ளது

சீனாவில் புதிய வைரஸ்: மூன்று மடங்கு அதிகரித்துள்ளது

462
0
சீனாவில் புதிய வைரஸ் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது இந்த வார இறுதிக்குள் சீனாவின் மற்ற முக்கிய

சீனாவில் ஒரு புதிய வைரஸ் தொற்று பரவியுள்ளது. இது இந்த வார இறுதிக்குள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது வுஹனிடம் இருந்து சீனாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கு பரவியிருப்பதாக நம்பப்படுகிறது .

சீனாவில் புதிய வைரஸ்

சீனாவில் உள்ள பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் ஷென்சென் ஆகிய இடங்களில் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் வுஹனில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்த வைரஸால் மூன்று பேர் இறந்துள்ளனர். இதன் தாக்கம் ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன.

இது ஒரு வகை நிம்மோனியாவை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் பதிய திரிபு. இந்த வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடும் என்று சீனா எச்சரித்துள்ளது.

விஷக்கிருமிகளை பற்றி விசாரணை செய்யும் சுகாதாரக் குழுவின் தலைவரான ஜாங் நான்சன் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது 14 மருத்துவ தொழிலாளர்களுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளதாக கூறுகிறார்.

இந்த தொற்று நோய் ஒரு சந்தையில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது என்றாலும் அதிகாரிகளாலும் ,விஞ்ஞானிகளாலும் இது எப்படி பரவிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய இயலவில்லை.

சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ்

இந்த வைரஸானது 2000ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல நாடுகளில் பெரும்பாலும் ஆசியாவில் 774 பேரைக் கொன்ற சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸை நினைவுபடுத்துகிறது.

மரபணுக் குறியீடு பற்றிய ஆய்வில் மற்ற மனித நோய்களைக் காட்டிலும் சார்ஸ் வைரஸுக்கும் இந்த வைரஸுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது .

இங்கிலாந்து வல்லுனர்கள் கூறுகையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1700 ஆக இருக்க கூடும் என்று கூறியுள்ளனர்.

மற்ற நாடுகளுக்கு பரவிய வைரஸ்

தாய்லாந்து, ஜப்பான், தென் கொரிய நாடுகளில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வுஹனில் உள்ளவர்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாக தெரிகிறது.

தென்கொரியாவில் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகையில் ஒரு 35 வயது சீனப்பெண் வுஹனில் இருந்து பயணம் செய்த பின்னர், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலில் சிக்கியிருப்பதாக கூறினார்.

உலக சுகாதார அமைப்பு சுற்றுலா மற்றும் வணிகம் பற்றி தடைகள் இல்லை என்று கூறியுள்ளது. எனினும் எந்த அறிவிப்பிற்கும் தயார் நிலையில் இருக்கும்படி மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியுள்ளது.

Previous articleகுஞ்சாலி மரைக்கார்: வரலாற்றுப் படத்தில் கீர்த்தி சுரேஷ்
Next articleஉக்ரைன் விமான நிலையம்: 2 ஏவுகணைகள் வீசிய விவகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here