Home Latest News Tamil ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை: எதியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடிப்பு

ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை: எதியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடிப்பு

2163
0
ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை

ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை: எதியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடிப்பு

எதியோபியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் இன்று காலை எதியோபியா நாட்டின் தலைநகரம் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்டு நைரோபி கென்யா சென்ற விமானம் பாதி வழியில் வெடித்தது.

விமானம் புறப்பட்டு வெறும் 6 நிமிடத்தில் விமானம் வெடித்தது. இந்த விமானம் புதிய  Boeing 737 MAX 8 மாடல்  வெறும் நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் வாங்கியதாம்.

காலை 8.38 மணிக்கு புறப்பட்ட விமானம் 8.44 மணிக்கு சிக்னலை இழந்தது. குழப்பத்தில் இருந்த நிர்வாகம் சிறிது நேரத்தில் தேடலை ஆரம்பித்தது.

எதியோபியா தலைநகரத்தில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் வெறும் 62km தொலைவில் விமானம் வெடித்தது தெரிய வந்தது.

149 பயணிகளுடன் 8 விமான ஊழியர்களும் உயிரிழந்தனர். ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் வெடித்ததற்கு சரியான காரணம் தெரியவில்லை.

டெக்னிகல் பிரச்சனையாக இருக்கலாம் என்றும் விமானம் ஆபத்தான கோணத்தில் பறந்ததாகவும் புதிய ஃபிரண்ட் 737max இல் சாஃப்ட்வேர் பிரச்சனை இருக்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

எதியோபியன் நாட்டின் பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here