வைரலாகும் சர்ஃப் எக்ஸல் விளம்பரம்: மதத்தை இழிவு படுத்துகிறதா?
நாம் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான சர்ஃப் எக்ஸல் சோப்பு பவுடர் சமீபத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது ட்விட்டரில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.
யூனிலீவர் நிறுவனத் தயாரிப்பான சர்ஃப் எக்ஸல் சோப்புத்தூள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்து முஸ்லிம் மத ஒற்றுமை பற்றிய ஒரு சிறப்பு விளம்பரம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்டது.
இந்த விளம்பரத்தில் ஒரு நகரத்தின் தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீதியில் வருவோர் போவோர்கள் மீது ஹோலி வண்ணங்களால் அடித்து விளையாடுகின்றனர்.
அப்போது அந்த வழியில் வெள்ளை ஆடை அணிந்து வந்த ஒரு இந்துச் சிறுமியின் மீது வழக்கம் போல் தொடர்ச்சியாக வண்ண நீர் பந்துகளை அடித்தனர். அந்தச் சிறுமி நீண்ட நேரம் சைக்கிளில் அதே பாதையில் உலாவிக் கொண்டிருந்தார்.
மற்ற சிறுவர்களிடம் இருந்த ஹோலி வண்ணங்கள் தீர்ந்தவுடன் அங்கு மறைந்திருந்த தன்னுடைய வெள்ளை ஆடை அணிந்த முஸ்லிம் நண்பரை அழைத்துச் சென்று மசூதியில் இறக்கி விட்டார்.
மதம் கடந்து தன்னுடைய நண்பருக்கு உதவியது பார்ப்பதற்கு ஆரோக்கியான ஒன்றாக இருந்தது. மேலும் இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
ஆனால் மற்றொரு பக்கம் விளம்பரத்தை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
உங்களுடைய ஆதாயத்திற்காக விளம்பரத்தில் மதத்தை இழுக்க வேண்டாம் என்று #BoycottSurfExcel ஹஷ்டக் வைத்து சிலர் ட்வீட் போட்டு வருகின்றனர்.