லெனின் பிறந்தநாள் நேற்று உலகம் முழுவதும் கொரோனாவால் வெளியில் சென்று கொண்டாடமுடியவில்லை. இருப்பினும் ஊரடங்கை மீறி ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மரியாதை செலுத்தி உள்ளனர்.
ரஷ்ய கம்யூனிஸ்ட்கள் மரியாதை
சோவியத் யூனியனை நிர்மாணித்தவர், விளாடிமிர் லெனினின் 150-ஆவது பிறந்தநாளை கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு முன் நேற்று கொண்டாடினர்.
ரஷ்யாவில் கோரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு ரஷ்யாவில் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் உணவு மற்றும் மருந்து வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லெனின் பிறந்தநாள்
இந்நிலையில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி ஸ்யோகனோவ் தலைமையில் கம்யூனிஸ்டுகள் விளாடிமிர் லெனினனின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக செஞ்சதுக்கத்தில் அணிவகுத்து சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்யோகனோவ், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ரஷ்ய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், 1960-ஆம் ஆண்டு மாஸ்கோவில் ஏற்பட்ட சின்னம்மை நோயை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சோவியத்தின் சிறந்த நடவடிக்கைகளுக்கு ஈடாகவில்லை என்றும்; மூன்று மாதங்களில் தற்போதைய ரஷ்ய அதிகாரிகளால் முகமூடிகளை கூட தயாரிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
சோவியத் யூனியன் பிளவுபட்டு, 20 ஆண்டுகள் கடந்த பின்பும் விலாடிமிர் லெனின்னும் அவரது நினைவிடமும் உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகின்றன