சியோல்: கடந்த இருமாதங்களை ஒப்பிடும் பொழுது இன்றய கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திற்க்கு வந்து உள்ளதாகவும் தற்போது இது 8 பேராக குறைந்து உள்ளதாகவும் கொரிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (KCDC) பிரிவு கூறியுள்ளது.
இந்த 8ட்டில் 5 பேர் வெளிநாட்டினை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது.
கடந்த பிப்ரவரி 18 க்கு பிறகு இவ்வாறு ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்புகள் வருவது இதுதான் முதல் முறை எனக் கூறப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,661 ஆக உள்ளது.
தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் இன்று தெரிவிக்கையில் தெங்கொரியாவின் இந்த நிலைப்போல் மற்ற உலக நாடுகளிலும் இந்த வைரஸ் கட்டுக்குள் வர வாய்புள்ளதாகவும்,
இந்த ஆண்டின் துவக்கத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், பிறகு மற்ற நாடுகளிலும் இந்த வைரஸ் வேகம் காட்ட ஆரம்பித்ததாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சனிக்கிழமை பேசுகையில் கொரோனா வைரஸ்ஸை கட்டுபடுத்துவதில் தென் கொரியா செய்த உதவிகளுக்கு ஊக்கம் தெரிவித்தார்.