Home நிகழ்வுகள் உலகம் கொரோனா வைரஸ் மனிதர்களுடன் ஒன்றி வாழ தன்னை மாற்றியமைத்துள்ளது: விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் மனிதர்களுடன் ஒன்றி வாழ தன்னை மாற்றியமைத்துள்ளது: விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் மனிதர்களுடன் ஒன்றி

வௌவால்களிடமிருந்து வந்ததாக கருதப்படும் கொரோனா வைரஸ் மனிதர்களுடன் ஒன்றி வாழ்வதற்காக தன்னை தயார் படுத்தி கொண்டுள்ளமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வைரஸ்ஸின் மரபனுவில் மாற்றம்

63 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 5,300 க்கும் அதிகமான கொரோனா வைரஸ்ஸின் மரபனுக்களை ஆராய்ச்சி செய்ததில், இந்த வைரஸ்ஸானது நிலையான தன்மை உடையதாக இருந்தாலும், சில வைரஸ் மாதிரிகளில் முக்கிய மரபணு என கருதப்படும் “ஸ்பைக் ப்ரோட்டீன்”இல் மாற்றங்கள் தெரிவதாகவும் அதனால் மனிதர்களின் செல்களில் தொற்றும் தன்மையில் மாற்றம் இருக்க வாய்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இலண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் ட்ராபிகல் மெடிசின் உள்ள ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ்ஸில் இந்த மாற்றம் எவ்வாறு வந்தது என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை, ஆனால் இவ்வாறு தன்னிச்சையாக மாறுதல்களை வைரஸ்கள் ஏற்படுத்தி கொண்டால் பல நாடுகளிலும் எளிதாக இந்த வைரஸ் பரவ வழிவகுத்து விடும் என அவர்கள் தெரிவித்தனர்.

தடுப்பூசியின் திறனை பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்

மற்றொரு ஆய்வாளரான மார்டின் ஹிப்பர்ட் தெரிவிக்கையில் “இந்த முக்கிய மரபணுவாக கருதப்படும் “ஸ்பைக் ப்ரோட்டீன்”னுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடித்து வரும் வேளையில், கொரோனா வைரஸ்ஸின் இவ்வாறான தன்னிச்சையான மாறுதல்கள், தடுப்பூசியின் திறனை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

கொரோனாவின் இந்த “ஸ்பைக் ப்ரோட்டீன்” ஆனது மனித செல்களில்  ஸார்ஸ் வைரஸை விட அதிக ஒட்டும் தன்மை உடையது அதனால் தான் இந்த வைரஸ் மிக விரைவாக மனிதர்களிடம் பரவும் தன்மையை அடைந்துள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here