2022 வரை சமூக விலகல் நீடிக்கலாம்; 2022 Social Distancing Harvard, கொரோனா தடுப்பூசி இல்லையெனில். 2022 வரை சமூக விலகல் கடைபிடிக்கும் நிலை ஏற்படுமாம்.
ஹார்வர்ட் பல்கலை கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கொரொனாவிற்கு முறையான சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ வரதாவரை சமூக விலகலே ஒரே தீர்வு என கூறியுள்ளது.
இதனால் குறிப்பாக அமெரிக்கா 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்கும் நிலை ஏற்படலாம் என கூறியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தீ போல் பரவி வருகிறது.
கடந்த செவ்வாய் கிழமை அமெரிக்காவில் ஒரே நாளில் 2200 பேர் உயிரழந்துள்ளனர். மேலும் ஒட்டுமொத்தமாக 29000க்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பிறகு மக்கள் நல ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தடுப்பூசி அல்லது முறையான சிகிச்சை இல்லையெனில் 2022 வரை சமூக விலகல் நீடிக்கும் என தெரிவித்துள்ளது.