தென் ஆப்பிரிக்க மட்டைபந்து வீரர் சோலோ நெக்வெனி (SOLO NQWENI), கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர் தென் ஆப்பிரிக்கா மட்டைபந்து அணியின் ஆல்ரவுண்டர் என தெரியவந்துள்ளது. தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது மட்டைபந்து வீரர் நெக்வெனி
சோலோ நெக்வெனி கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்படும் மூன்றாவது மட்டைபந்து வீரர் ஆவார், இதற்கு முன் பாகிஸ்தானின் ஜாஃபர் சர்ஃபராஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் மஜித் ஹாக் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சோலோ நெக்வெனியின் மேலாளர் நெக்வெனியின் உடல்நிலை தற்போது சீராகி வருவதாகவும், கூடிய விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆல்ரவுண்டர் நெக்வெனி
தென் ஆப்பிரிக்காவின் 19 வயதிற்கு குறைந்தவர்களுக்கான அணியில் 2012 ஆம் ஆண்டு சோலோ நெக்வெனியின் இடம்பிடித்திருந்தார் மேலும் கிழக்கு மாகாணத்திற்கான அணியிலும் மற்றும் வார்ரியார்ஸ் பிரான்சீஸ் ஆகிய அணிகளிலும் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். இறுதியாக அவர் ஏப்ரலில் கிழக்கு மாகாணத்திற்கான மட்டைபந்து அணியில் விளையாடிய பொழுது 7 ஆம் நபராக களம் இறங்கி 95 ஓட்டங்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.