வாஷிங்டன்: வெள்ளிகிழமை, வெளிநாட்டிலிருந்து வேலை மற்றும் வாழ்வுக்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்பவர்களை நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையால் கொரோனா பாதிப்பிலிருந்த அமெரிக்கா மீண்டுவந்த பின்பு அமெரிக்காவில் உள்ள வேலைகளுக்கு வெளிநாட்டவர்களின் போட்டி இருக்காது எனவும், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு காப்பாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
குடிபெயர்பவர்களை நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்
ட்விட்டரில் ட்ரம்ப் இதைபற்றி கூறும் பொழுது, “ கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் இருந்து மீளவும், அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கவும், வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்பவர்களை நிறுத்த ஆணை பிறப்பிக்கவுள்ளேன்” என தெரிவித்தார்.
கொரோனா தாக்குதல் அமெரிக்காவில் உச்சத்தை எட்டிஉள்ளதை அடுத்து அமெரிக்கர்களையும் அவர்களது வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் நோகத்தோடு, அமெரிக்காவை ஏனைய உலத்தொடர்பில் இருந்த பிரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அடுத்த சில நாட்களில் வெளிநாட்டினருக்கு கிடைக்க இருந்த வேலை வாய்ப்பு விசாக்களையும், குடியுரிமைகளையும் இந்த அரசாணை தடுக்கும் என தெரிகிறது.
மிகவும் அத்தியாவசியமாக அமெரிக்காவிற்கு தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு 2016ல் வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கையை 617,752லிருந்து 25% குறைத்து 2019 ஆம் ஆண்டு 462,422 ஆக நிர்ணயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.