ட்ரம்ப் இந்தியா வருகை: அரசியல் நோக்கமா? ஜிஎஸ்பி வர்த்தக பட்டியல் (Generalized system of preferences – GSP), மீண்டும் இந்தியா இடம்பெறுமா?
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் நிலையில் ட்ரம்பின் இந்திய வருகை அரசியல் நோக்கம் உடையதா எனக் கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் ஓட்டுக்களைப்பெற ட்ரம்ப் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதாக கருத்து நிலவுகின்றது.
ட்ரம்ப் இந்தியா வருகை
வாஷிங்டனில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் இந்த வாரத்தில் டெல்லி வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்க்க வர இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இன்னும் முறைப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பிப்ரவரி இறுதியில் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி கோரிக்கை
ஜனவரி 7ம் தேதி இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தொலைபேசி உரையாடலின் எதிரொலியாக ட்ரம்ப் இந்தியா வருகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அவர்கள் முதலில் சிறப்பு விருந்தினராக குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகவும் அது தடைபட்டு பின்னர் பிப்ரவரியாக மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிஎஸ்பி வர்த்தக பட்டியல்
ட்ரம்பின் இந்திய பயணத்தில் ஜிஎஸ்பி சலுகையை இந்தியாவிற்கு மீண்டும் அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்பி பட்டியலில் இந்தியா மீண்டும் இடம் பெற்றால் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா அமெரிக்காவில் வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியும்.
Generalized system of preferences – GSP
அமெரிக்கா, உலகின் சில முக்கிய நாடுகளை (இந்தியா உள்பட) வர்த்தக முன்னுரிமை நாடுகள் (Generalized system of preferences – GSP) என்ற பட்டியலில் வைத்திருந்தது.
அமெரிக்க – சீன வர்த்தகப் போரை தொடர்ந்து இந்தியாவின் ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை ட்ரம்ப் ஜூன் முதலாம் தேதி 2019-ம் ஆண்டு ரத்து செய்தார்.
தற்போது ட்ரம்ப் வருகையை தொடர்ந்து, இந்தியா மீண்டும் ஜிஎஸ்பி மூலம் பலன் பெற முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.