சிரியா ரஷ்யா கூட்டணி; பின்வாங்கிய துருக்கி, துருக்கி பாதுகாப்பு அமைச்சர் லூசி கூறியதாவது
துருக்கி சிரியா மோதலில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா வந்ததால் ரஷ்யாவுடன் எங்களுக்கு மோதும் எண்ணம் இல்லை என துருக்கி அருவித்துள்ளது.
இருந்தாலும் சிரியா மீதான தங்கள் தாக்குதலை நிறுத்தபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
துருக்கி பாதுகாப்பு அமைச்சர் லூசி கூறியதாவது
இட்லிப் மாகாணத்தில், எங்களது படையினர் மீது சிரியா இராணுவம் கடந்த மாதம் 27ஆம் திகதி நடத்திய விமானத் தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனால் சிரியா மீதான எங்கள் தாக்கம் ஒரு போதும் குறையாது என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் சிரியாவுக்கு ஆதரவாக வரும் ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் இல்லை.
மேலும் சிரியா எல்லைக்குள் துருக்கி தனது படைகளை குவித்து வைத்துள்ளது. சிரியா படைகளை பழிவாங்கும் விதமாக துருக்கி விமானதாக்குதல்கள் நடத்திவருகிறது.
ஒரு பக்கம் சிரியா மற்றும் ரஷ்யா படைகள் இட்லிப் மாகாணத்தில் ஒன்று சேர்ந்து ஆயத்தமாகி வருகின்றது.