இலண்டன்: சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் கொரோனாவை கண்டுபிடிக்குமா என சோதனை முயற்சி. தி ச்சேரிட்டி மெடிகல் டிடெக்சன் டாக்ஸ்( The Charity Medical Detection Dogs) என்ற அமைப்பு ஏற்கனவே மலேரியா, கேன்சர் மற்றும் மூளை தேய்மானம் போன்ற நோய்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறது.
இந்த அமைப்பு இப்போது கொரோனா பரவலை தடுக்க துர்காம் பல்கலைகழகம் மற்றும் இலண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் ட்ராபிகல் மெடிசீன்(LSHTM) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளது.
நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிளாரி கெஸ்ட் தெரிவிக்கும் பொழுது “எச்சரிக்கையாக வைரஸின் வாசனையை பிடிப்பது எப்படி என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்” என தெரிவித்தார்
வேகமானது மற்றும் எளிதானது
மற்ற நோய்களை போலவே இதையும் மோப்ப நாய்கள் கொரோனாவை கண்டுபிடிக்க முடிந்தால், அறிகுறிகள் இல்லாதவர்களிடமும் இந்த முறையை பயண்படுத்தி எளிதாக கொரோனாவை கண்டுபிடிக்கலாம்.
இவ்வாறு பரிசோதனை செய்வது வேகமானது மட்டுமல்லாமல் செலவு இல்லாததும் ஆகும்.
‘ஒவ்வொரு நோய்க்கும் ஒரு வாசனை இருக்கும்’ என இந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆறு வாரங்களுக்கு பயிற்சி கொடுத்தால் இவ்வாறு நோய்களை கண்டுபிடிக்கும் வகையில் நாய்களை தயார்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முறையில் விமான நிலையத்திலிருந்து வருபவர்களுக்கு கொரோனா உள்ளதா என எளிதாக கண்டுபிடிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த முறையில் நாய்களைக் கொண்டு கொரோனாவை கண்டுபிடிப்பதனால், பிற்காலத்தில் இந்த நோய் பரவலை எளிதாக கட்டுபடுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.