முகுல் வாஸ்னிக்; 60ஆம் கல்யாணம் இல்லை 60வயதில் தான் கல்யாணமே
காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் மூத்த தலைவரான முகுல் வாஸ்னிக் தன்னுடைய 60ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார்.
தன்னுடைய நீண்ட கால பெண் நண்பரான ரவீனா குரானவை திருமணம் செய்து கொண்டார். ரவீனா குரானா ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்யாணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் தரப்பில் இருந்து வாழ்த்துகள் பெற்றார் முகுல் வாஸ்னிக்.
மேலும் ராகுல் காந்தி கட்சியில் இருந்து விலக நினைக்கும் பொழுது இவருக்கு தான் தலைமை பொறுப்பு வழங்கலாம் என பேச்சு அடிபட்டது. அந்த அளவுக்கு முக்கியமான தலைவர் ஆவார்.