Home அரசியல் தர்மயுத்தம் அணிக்கு சபாநாயகர் நோட்டீஸ்; பதவி பறிபோகுமா?

தர்மயுத்தம் அணிக்கு சபாநாயகர் நோட்டீஸ்; பதவி பறிபோகுமா?

519
0
சபாநாயகர் நோட்டீஸ் தர்மயுத்தம் அணி ஓபிஎஸ்

தர்மயுத்தம் அணிக்கு சபாநாயகர் நோட்டீஸ்; பதவி பறிபோகுமா? ஓபிஎஸ் தலைமையிலான 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் மீண்டும் தூசி தட்டப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் தர்மயுத்தத்தில் ஈடுபட்டார். எடப்பாடி அரசுக்கு எதிராக அவர் அணியில் இருந்த 11 பேர் வாக்களித்தனர்.

பின்னர் சிறிது நாட்களிலேயே எடப்பாடியும், பழனிச்சாமியும் இணைந்து அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கினர்.

அப்போது டிடிதினகரன் தலைமையில் ஒரு அணி அதிமுகவில் இருந்து பிரிந்தது. அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் திமுக ஓ.பி.எஸ். உடபட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தபோது ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அங்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக உச்சநீதிமன்ற கூறியது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது. இந்நிலையில் சபாநாயகர் தனபால், ஓபிஎஸ் உட்பட 11 பேருக்கு நோட்டிஸ் வழங்கி உள்ளார்.

எனவே மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு உள்ளதா? ஓபிஎஸ் பதவி பறிபோகுமா? எனச் சந்தேகம் எழுந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here