சிவசேனா; டெல்லியைப் போல் மகாராஷ்ட்ராவிலும் கலவரம் செய்ய விரும்பும் பிஜேபி, மராட்டிய மாநிலத்திலும் வன்முறை நிகழ்த்த விரும்பும் பாஜகவினர் என குற்றம் சாட்டியுள்ள சிவசேனா.
மாரட்டிய மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தன்னுடைய 100 நாள் ஆட்சிக்கு பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வந்தார்.
இதைப் பொறுக்காத பாஜகவினர் அவரை போலியாக நடிப்பதாக விமர்சனம் செய்தனர். இது பற்றி சாம்னா பத்திரிக்கையில் உத்தவ் தாக்கரே கூறியது பின்வருமாறு.
சாம்னா பத்திரிக்கை கூறியிருப்பது
போலியாக வேஷம் போட்டு நடிப்பது முதலமைச்சர் இல்லை. பாஜகவினர் தான் போலியாக நடிக்கின்றனர். வெறுப்புணர்வை பரப்புகின்றனர்.
மற்றவர்களின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள இயலாத குணம் கொண்டவர்கள். டெல்லியைப் போல மராட்டியத்திலும் வன்முறை நிகழ வேண்டும் பா.ஜனதா கட்சி விரும்பியது.
முதலமைச்சரின் முன் எச்சரிக்கையில் அது போன்ற எந்த விட அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக்கொண்டார்.