டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அலுவலகத்தை திறந்து வைத்தார். தினகரனை எழவிடாமல் அடிப்பதற்கே ரஜினி இன்று மேடை ஏறினார் என பரபரப்பு ரிப்போர்ட் மிஸ்டர் புயல் இணையதளத்திற்கு கிடைத்துள்ளது.
ரஜினி மக்கள் மன்றக் கூட்டத்தில் ரஜினி பேசியபோது, நான் முதல்வர் இல்லை, 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கு பதவி மற்றும் பொறுப்பு வழங்குவேன் எனக் கூறினார்.
கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என ஒரு புதிய உத்தியை அறிமுகம் செய்தார். அதேபோல் தேர்தல் நேரத்தில் பயன்படுத்துபவர்கள் பணி முடிந்தவுடன் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் எனக் கூறினார்.
கட்சி எப்போது உதயம் ஆகும் என்ற கேள்விக்கு வழக்கம்போல் தமிழகத்தில் எழுச்சி வரட்டும் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். ஆக, ரஜினி தேர்தலில் போட்டியிடுவாரா என மீண்டும் குழப்பிவிட்டே சென்றுள்ளார்.
ரஜினிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்
டிடிவி தினகரன் இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போட்டியாக அதே ராயப்பேட்டையில் அமமுக அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார்.
இது பலநாட்கள் முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று. இன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் டிடிவி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மீடியாக்களில் இன்று பரபரப்பு செய்தி டிடிவி தினகரன் செய்தியாகத்தான் இருந்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் விவாதங்கள் நடத்திருக்க வேண்டும்.
ஆனால், அதை தவிடுபொடியாக்கி உள்ளது ரஜினியின் பேச்சு. அவர் பேசிய பேச்சில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இது அமமுக கட்சியை வெளியில் தெரியவிடாமல் செய்வதற்கு என்று.
டிடிவி காத்திருப்பு
பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால் அதற்கு அதிமுக என்ற ஒரு துருப்புச்சீட்டு வேண்டும். அதன் வாக்குவங்கி உடையாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், டிடிவி இருக்கும் வரை எந்நேரமும் பதற்றம் தான்.
அதிமுக ஆட்சி எப்போது கவிழும். கட்சியை எப்படி உடைக்கலாம் என டிடிவி பொறிவைத்து காத்துக்கொண்டு உள்ளார்.
கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை
ரஜினி கூறிய கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை ஒன்றும் புதியது அல்ல. அதிமுகவில் ஏற்கனவே அரங்கேறியுள்ளது.
ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். இபிஎஸ் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர். ஆட்சியில் இபிஎஸ் முதல்வர், ஓபிஎஸ் துணை முதல்வர்.
இதை சற்று ரஜினி மாற்றி கூறியுள்ளார். கட்சியில் தான் தலைவர். ஆட்சியில் வேறு ஒருவர் தலைவர் என்று.
ரஜினி இன்று திடீரென ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து பேசக்காரணம் என்ன? அவர் கட்சி பற்றி முக்கிய அறிவிப்பு எனக்கூறிவிட்டு கட்சியில் யார் தலைவர், ஆட்சியில் யார் தலைவர் எனக்கூறியுள்ளார்.
இல்லாத ஒரு கட்சிக்குத் தலைவர் யார் எனச் சொல்வது கூடப் பரவாயில்லை. அந்த கட்சி ஜெயித்து ஆட்சியை பிடித்துவிட்டது! அதற்கு முதல்வர் யார்? என ரஜினி இப்போதே தேடத்துவங்கியுள்ளார்.
கவுண்டமணியின் கொட்டாம்பட்டி மில் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. ரஜினி இத்தனை வருடமாக தன்னுடைய ரசிகர்களை புதுப்புது பாணியில் குழப்பிக்கொண்டு உள்ளார் என்பது மட்டும் தெளிவு படுகிறது.
ரஜினி மட்டும் இல்லாமல், விஜய் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு என மீடியாக்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு தினகரன் கட்சி அலுவலகம் திறப்பு முடிந்தவுடன், விஜய் வீட்டு அலமாரிக்கு வைத்த சீலை அகற்ற வந்தோம் என அதிகாரிகள் கூலாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
டிடிவி கட்சி திறப்பு அலுவலகம் அனைத்து மீடியாக்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்து பரபரப்பு விவாதமாக நடக்காமல் செய்வதே ரஜினிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். அது சிறப்பாக சக்சஸாக முடிந்துவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள போஸ்புக் பக்கத்தை லைக் செய்யுவும். Facebook Like | Twitter Follow