புரட்சித் தலைவி ஜோதிகா என்றவுடன் பதற வேண்டாம். ஜோதிகாவை அரசியலுக்குள் இழுக்கும் முயற்சியில் அவருடைய அக்கா, நக்மா மும்முரம் காட்டி வருகிறார்.
புரட்சிப் பட்டம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு, கட்சியைக் கைப்பற்றியவர் ஜெயலலிதா. அன்று முதல் புரட்சித் தலைவியாக உருவெடுத்தார்.
அதன் பிறகு பல நடிகர்கள் புரட்சி என்ற வார்த்தையைப் பெயருக்கு முன் சேர்த்துக் கொண்டு நாற்காலி கனவில் மிதந்தனர். ஆனால் அது எல்லோருக்குமே எட்டாக்கனியாக உள்ளது.
ஜெயலலிதா-கருணாநிதி என அடுத்தடுத்து மரணம். அரசியலில் அடுத்து நிலைக்கப்போகும் தலைவர்கள் யார்? கட்சிகள் எது? என ஒரு பெரிய கேள்விக்குறி உருவாகியுள்ளது.
சீனியர் நக்மா
கமல் வந்துவிட்டார், ரஜினி வரப்போகிறார், விஜய் வந்துவிடுவார் என தமிழக அரசியலே ஒரு குழப்பமான சூழலை நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது.
ரஜினி, கமல் இவர்களுடன் ஜூனியர் நடிகையாக அறிமுகமான நக்மா, அரசியலில் சீனியராக இருவருக்கும் முன்பே குதித்துவிட்டார்.
நக்மாவின் அரசியல் பார்வை தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது. தமிழகத்தில் தங்கை ஜோதிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் நற்பெயர் உண்டு. அதைப் பயன்படுத்திக்கொள்ள நக்மா முயற்சித்து உள்ளார்.
அரசியல் பக்கமே வரமாட்டேன் எனச் சொன்ன நடிகர் கமலே கட்சி துவங்கிவிட்டார். அதனால் எந்த புத்துக்குள், எந்த பாம்பு இருக்கும் என எப்போதும் உறுதியாக சொல்ல முடியாது.
நக்மாவின் மாஸ்டர் ப்ளான்
விசயம் என்னன்னா? தம்பி படத்திற்கு பிறகு, ஜோதிகா 8 படங்களில் நடிக்கத் திட்டமிட்டு உள்ளார். இதற்காக நக்மா ஒரு பெரும் தொகையை முதலீடு செய்து மாஸ்டர் ப்ளான் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த 8 படங்களுமே மக்கள் பிரச்சனைகள், பெண்களின் பெருமைகள் பேசும் படங்கள். மக்களிடம் ஜோதிகாவின் செல்வாக்கை உயர்த்தும் விதமாக இக்கதைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
புரட்சித் தலைவி ஜோதிகா
இப்படங்கள் மூலம் திட்டமிட்டபடி மக்களிடம் செல்வாக்கு உயர்ந்தால், 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் தமிழக அரசியலில் வெற்றிடம் தொடர்ந்து நிலவினால், ஜோதிகாவும், புரட்சித் தலைவி போன்று ஒரு அவதாரம் எடுப்பார் என்பது உறுதி.
அதேவேளை அவர் தேசியக்கட்சியில் இணைவாரா? புதிய கட்சி துவங்குவாரா? அவருடைய கணவரும் நேரடி சப்போர்ட் கொடுப்பாரா? என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியவரும்.