கோப்ரா – Cobra: விக்ரம் நடிக்கும் புதிய படத் தலைப்பு ‘கோப்ரா‘ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
The King Cobra
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தலைப்பே மிகவும் டெரராக வைத்துள்ளனர்.
Cobra என்ற தலைப்பை விக்ரமின் புதிய படத்திற்கு சூட்டியுள்ளனர். இந்த தலைப்பை கிறிஸ்துமஸ் அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
Kobra என்றால் ராஜ நாகம். படத்தில் விக்ரம் கெட்டப் எப்படி இருக்கும் என தெரிய வேண்டுமானால் கிறிஸ்துமஸ் வரை காத்திருக்கவும்.
படம் எப்படி?
விக்ரம் தற்பொழுது, துருவநட்சத்திரம் படத்தில் நடித்து முடித்து விட்டார். ஆர்.எஸ். விமல் இயக்கத்தில் ‘மகாவீர் கர்ணா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் தலைப்பை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். இருப்பினும், இப்படம் எப்பொழுது முடிவடையும்?
எப்பொழுது ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு உள்ளனர்? என்பது பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.