Home அரசியல் முன்னேறிய பாஜக; காணாமல் போன காங்கிரஸ்

முன்னேறிய பாஜக; காணாமல் போன காங்கிரஸ்

319
0
முன்னேறிய பாஜக; காணாமல் போன காங்கிரஸ் ஆம் ஆத்மி பின்னடைவு

முன்னேறிய பாஜக; காணாமல் போன காங்கிரஸ். வாக்கு வங்கியில் ஆம் ஆத்மி பின்னடைவு.  திமுகவுடன் பிரசாந்த் கிஷோர்.

டெல்லி தேர்தல் 2020

கடந்த ஒரு மாதமாக  அனல் பறக்கும் பிரச்சாரம், குடியுரிமை சட்ட போராட்டம், பொது பட்ஜெட் தாக்கல் என பரபரப்புடன் காணப்பட்ட டெல்லி இன்று கொஞ்சம் பரபரப்பு குறைந்து காணப்படுகிறது.

எனினும் இன்று முதல் பாராளுமன்றத்தில் விவாதங்கள் அனல் பறக்கும் என்பதால் டெல்லி மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றால் மிகை ஆகாது.

சொல்லி அடித்த ஆம் ஆத்மி

கடந்த 8 தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின, அதில் எதிர்பார்த்த மாதிரியே ஆளும் ஆம் ஆத்மி அரசு மீண்டும் அசுர பலம் பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது.

தேர்தல் கருத்து கணிப்புகள்

ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும்  ஆளும் ஆம் ஆத்மிக்கு சுமார் 55 முதல் 63 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62-யை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

எனினும் கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்த மாதிரிகளில் தேசிய கட்சியான பாஜகவுக்கு சுமார் 4 முதல் 14 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வெறும் 8 இடங்களை மட்டுமே பாரதிய ஜனதா கட்சியால் கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியம் மட்டுமே கிடைத்தது.

முன்னேறிய பாஜக

இது ஒருபுறம் இருந்தாலும் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின் வாக்கு சதவீத அடிப்படையில் கட்சிகளின் தரத்தை பிரித்தால் ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களின்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி சுமார் 1 சதவீத வாக்குகளை இம்முறை இழந்துள்ளது. சிறிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதேநேரம் 8 தொகுதிகளைப் பெற்றிருக்கும் பாஜக கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் சுமார் 5 விழுக்காடு வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. பஜாவின் வாக்கு சதவீதம் வளர்ந்துள்ளது.

பாஜக வெல்லும் மக்களவை தேர்தல்

சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், உடனடியாக மக்களவைத் தேர்தல் நடைபெறுமானால் பாஜகவே அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக தேசிய தலைவர் ஜெ பி நட்டா

தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ பி நட்டா, “தேர்தல் முடிவுகளை ஏற்பதாகவும் பாஜக ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக செயல்படும்” எனக் கூறியுள்ளார்.

காணாமல் போன காங்கிரஸ்

ஒரு காலத்தில் டெல்லியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காங்கிரஸ் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை.

மேலும் வாக்குசதவீதம் முன்னெப்போதும் இல்லாதவகையில் 5 சதவீதத்திற்கும் கீழ் சென்றிருப்பது அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலவசம் மூலம் வென்ற ஆம் ஆத்மி

மேலும் இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெரும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்கள் அதிகம் இடம் பெற்றியிருந்தன என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

முக்கிய காரணமான பிரசாந்த் கிஷோர்

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக  i pack நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வகுத்துத் தந்த வியூகங்கள் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது

இதனிடையே நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் குறித்து தனது வாழ்த்தினை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தெரிவித்துள்ளார் நவீன சாணக்கியன் எனப்படும் பிரசாந்த் கிஷோர்.

மேலும் அடுத்ததாக அவர் அடுத்த வருடம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக எதிர்க்கட்சியான திமுகவுடன் கைகோர்த்து வியூகங்களை வகுத்து கொடுக்க உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here