மூன்றாவது அணியில் இந்தக் கட்சிகள் கூட்டணியா?
நாடளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக கட்சிகளின் கூட்டணி முடிவுகள் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக, பாஜக, பாமக என மூவர் கூட்டணியை முதலில் அறிவித்து தமிழக தேர்தல் களத்தில் டெரர் காட்டியுள்ளனர்.
திமுக கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சீட் ஒதுக்கி உள்ளது. இன்னும் திமுகவால் நிலையான முடிவை எடுக்க முடியவில்லை.
மேலும் சில முக்கியக் கட்சிகளைத் தன்பக்கம் இழுக்க திமுக முயற்சித்து வருகிறது. பாமக கட்சி அதிமுகவுடன் இணைந்ததில் திமுக கொஞ்சம் கடுப்பிலேயே உள்ளதாம்.
இரண்டு முக்கியக் கட்சிகள் இந்த முறை கிங் மேக்கர் கட்சியாக உருவெடுக்க உள்ளது. தேமுதிகவும், அமமுகவும் தான்.
அதிமுகவின் கணிசமான ஓட்டு வங்கியை அமமுக கட்சி தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவும் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது.
இதனால் இந்த இருகட்சிகளும் யார் பக்கம் இருக்கின்றனரோ அவர்களே தமிழகத்தில் வெற்றி பெரும் அணியாக மாறுவார்கள்.
அதேவேளை இந்த இரு கட்சிகளும் தனித்து நின்றால் அது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சற்று சறுக்கலை ஏற்படுத்தும்.
மூன்று அணிகளுமே சம பலத்தில் அமைந்துவிடும். இதனால் எந்தக் கட்சி வெற்றி பெரும் என்பது தேர்தலுக்குப் பின்பே இறுதி முடிவு கிடைக்கும்.
அதிமுகவில் சீட் குறைவாக உள்ளது என தேமுதிக இணைவதற்கு யோசனை செய்து வருகிறது. திமுகவில் இணைவது என்பதும் சந்தேகமே.
இதனால் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. மூன்றாவது அணி உருவானால் அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மநீம ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெறலாம் என பேச்சு அடிபடுகிறது.