Home அரசியல் தமிழக முதல்வருக்கு வைகோ கண்டனம்

தமிழக முதல்வருக்கு வைகோ கண்டனம்

446
0

எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் நாங்கள் என்பதை நிருபிப்போம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் நாளுக்குநாள் அதிகரித்து அதிக இழப்புகளை சந்தித்து வருகிறது.

இதனால் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று ஏப்ரல் 14 வது நாள் பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் மக்கள் முன்பு வந்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்தார்.

ஊரடங்கு உத்தரவை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தயாரானார்கள்.

திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையினரால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தார்கள். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசை வன்மையாக கண்டித்தார்.

தற்போது மறுமலர்ச்சி முன்னேற்ற திராவிடர் கழகத் தலைவர் திரு வைகோ அவர்கள் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை எழுப்பி பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது :

எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் நாங்கள் என்பதை நிருபிப்போம் – வைகோ #Vaiko #MDMK

திமுக தலைமையிலான தோழமை கட்சிகள் கூட்டத்திற்கு தடை?

பிரதமர் மோடி எப்படி அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தினார்?

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எப்படி நடத்த முடிந்தது?

இந்தியாவின் பல மாநிலங்களில் முதல் அமைச்சர்கள் கூட்டம் நடத்துகின்றனரே, தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா?

எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டாடுவது என்பது நாங்கள் நிரூபிப்போம்.

என்று பதிவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here