விஜயகாந்த்; கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன். தானாக முன்வந்து உதவும் தே.மு.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனா பாதிப்பால் உயிரழந்தவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூர் பகுதியில் ஒரு மருத்துவர் இறந்த பொழுதும் இதே போன்று தான் நடந்தது.
இடையே மற்ற சில இடங்களிலும் கடைபிடித்து வருகின்றனர். சில ஊர்களில் கொரொனாவல் குணமடைந்தோரை ஊரில் சேர்க்கவும் மறுக்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை புதைக்க தான் இடம் தருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள். கால்நடைகளை கூட முழுமனதோடு அடக்கம் செய்த நாம் இப்படி நடந்துகொள்வது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதுவது மருத்துவர்களை தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை அடக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.