நிலவை சுற்றிப்பார்க்க காதலி தேவை என யூசாகு மேசாவா என்ற ஜப்பானிய கோடீஸ்வரர் விளம்பரம் செய்துள்ளார். எலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் மூலம் பறக்கவுள்ளார்.
யார் இந்த யூசாகு மேசாவா?
யூசாகு மேசாவா ஒரு ஜப்பானிய கோடீசுவரர், தொழில்முனைவோர் மற்றும் கலை சேகரிப்பாளர். 1998 இல் ஸ்டார்ட் டுடே (Start Today) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
ஜப்பானின் மிகப் பெரிய நிறுவனமான ஜூஜூ டவுன் (zozo town) என்ற ஆன்லைன் பேஷன் சில்லறை வலைத்தளத்தை 2004-இல் தொடங்கினார்.
2019-ஆம் ஆண்டு ஜூன் வரை இவருடைய சொத்து மதிப்பு 1.8 பில்லியின் டாலர் என ஃபோர்ப்ஸின் (Forbes) பத்திரிக்கை மதிப்பிட்டு உள்ளது. இவர் ஜப்பானில் 17-வது பணக்காரர்.
நிலவை சுற்றிப்பார்க்க காதலி தேவை
யூசாகு மேசாவா காதலியைத் தேடும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். காதலிக்காக இணையத்தில் விளம்பரம் செய்து தேடி வருகிறார்.
அந்தக் காதலியுடன் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ராக்கெட் மூலம் சந்திர கிரகத்தை சுற்றிப்பறப்பார்.
சமீபத்தில் ஒரு ஜப்பானிய நடிகையுடான காதலை முறித்துக்கொண்டு பிரிந்து செல்வதாக அறிவித்தார் யூசாகு மேசாவா.
வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விரும்பும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
மூன்று குழந்தைகளைக் கொண்ட மேசாவா எனக்கு இப்போது 44 வயதாகிறது. தனிமை மற்றும் வெறுமை போன்ற உணர்வுகள் காரணமாகவே இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
SPACEX STAR SHIP
எலோன் ரீவ் மஸ்க் (Elon Musk) ஒரு பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் ஆவார். இவருடைய டெஸ்லா கார் நிறுவனம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுவிட்டது.
தற்பொழுது, ஸ்பேஸ் எக்ஸின் (SPACE X) நிறுவனர். பெரிய கனவுகளுடன் உள்ள தொழில் முனைவோர்களில் சம காலத்தில் வாழும் மிக முக்கியமான நபர்
வணிக விண்வெளி பயணத்திற்காக விண்கலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மஸ்க் தனது மூன்றாவது நிறுவனமான (SPACE X) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை 2002-இல் நிறுவினார்.
எதிர்காலத்தில் விண்வெளிச் சுற்றுலா மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான சரக்கு போக்குவரத்து ஒப்பந்தத்தை நாசா இந்த நிறுவனத்திற்கு வழங்கியது.
2023-ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தில் நிலாவுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் கலைஞர்களை தன்னுடன் அழைத்துச் செல்லவும் மேசாவா திட்டமிட்டுள்ளார்.