Home அறிவியல் உலக காடுகள் தினம் 2020; மரங்களின் முக்கியத்துவம்

உலக காடுகள் தினம் 2020; மரங்களின் முக்கியத்துவம்

628
0
உலக காடுகள் தினம் 2020
உலக காடுகள் தினம் 2020

உலக காடுகள் தினம் 2020; மரங்களின் முக்கியத்துவம், மனித வாழ்க்கையில் மரங்களின் முக்கியத்துவம்

2012-ஆம் ஆண்டு யுனைடெட் ஜெனரல் நேஷனல் அசெம்ப்ளியின் ஆணைப்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21-ஆம் தேதி உலக காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாட்டம் என்பது பண்டிகையப்போல அல்ல. காடுகள், காடுகள் சார்ந்த இடங்கள் மற்றும் வனப்பகுதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துணர்த்தும் ஒரு விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது.

1971-ஆம் ஆண்டு முதல் முறை 23-ஆம் ஐரோப்பியன் விவசாய மாநாட்டில் காடுகளைப் பற்றிய முக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் 21-ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இன்று நாம் வாழும் ஒவ்வொரு நகரங்களிலும் மரங்களுக்கு நாம் அதிக இடத்தை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு இடங்களையும் மனித வாழ்வதற்கு உகந்த தட்பவெப்ப நிலையை ஏற்படுத்த வேண்டும்.

மனித வாழ்க்கையில் மரங்களின் முக்கியத்துவம் 

  • மரங்கள் தட்பவெப்ப நிலையை தணிக்கும் தன்மை கொண்டது.
  • நகரங்களில் இருக்கும் மரங்கள் காற்று மாசுபாட்டை குறைக்கும்.
  • மேலும் இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் மரங்கள் இரைச்சலை குறைக்கும் தன்மை கொண்டது.
  • அதிக மரங்களை நகரங்களில் நடுவதன் மூலம் பசுமை நகரங்களாக மாற்றலாம்.
  • அதிக தண்ணீர் புலக்கத்திற்கும் நிலத்தடி நீரை சுத்திகரிக்கவும் இயலும்.

இவ்வாறு மரங்களின் முக்கியத்துவத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதன் மூலமே பூமியை வாழும் இடமாக மாற்ற இயலும்.

Previous articleமார்ட்டின் கப்தில் 237 உலககோப்பையில் அடித்த அடி; ரோஹித் ஜஸ்ட் மிஸ்
Next articleகொரோனா பயத்தால் மதுபானத்தை டோர் டெலிவெரி செய்ய வழக்கு தொடுத்த குடிமகன்கள்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here