கரக் மொறுக் சாப்பிடும் சத்தம் ஏன் சிலரை கோபப்படுத்துகிறது. கரக் மொறுக் என யாரவது அருகில் உட்கார்ந்து சாப்பிட்டால் கோபம் கொள்பவரா நீங்கள்?
கரக் மொறுக் சாப்பிடும் சத்தம்
அப்பளம் போன்ற நொறுங்கும் உணவுகள் சாப்பிடும்போது சப்தம் உண்டாகும். சிலர் எதைச் சாப்பிட்டாலும், சத்தம் கொடுத்துக்கொண்டே சாப்பிடுவர்.
ஒரு சிலர் ரசம் அல்லது மோர் ஊற்றி பிசைந்து சாப்பிட்ட பின் கொஞ்சம் மோர் அல்லது ரசம் இலையில் இருக்கும். அதை கைகளால் வழித்து உறிஞ்சி குடிப்பர்.
இதை சிலர் ரசித்து செய்வார்கள். ஆனால் அது அருகில் அமர்ந்து சாப்பிடும் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அது ஏன்?
மிஸோஃபோனியா மற்றும் பொனோஃபோபியா
அமைதியான இடத்திலோ அல்லது உணவகத்திலோ யாரோ ஒருவர், நொறுங்கும் உணவை உண்ணும்போது வரும் சத்தத்தை பலர் விரும்புவதில்லை.
சிலருக்கு எரிச்சலைக் கிளப்புவதைவிட அதீத கோபத்தை உண்டாக்குகிறது. சிலர் அதற்கு அஞ்சுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் “flight or fight response” என்றும் அழைப்பதுண்டு.
இதற்கு காரணம் “மிஸோஃபோனியா” என்ற வியாதிதான் கரணம் என்கிறார்கள். இதே போல் ஒரு சிலர் ஒலிகளை கண்டு அஞ்சுகிறார்கள். இந்த நிலைக்கு ‘பொனோஃபோபியா’ (Phonophobia ) என்று பெயர்.
நாம் சாதாரணமாக கடந்து செல்லும் சத்தம் கூட சிலருக்கு அதிபயங்கர சத்தமாகக் கேட்கும். அந்த நிலையை “ஹைபெராகியுசிஸ்” (Hyperacusis) என்கிறார்கள். இவை இரண்டுமே “மிஸோஃபோனியா” லிருந்து வேறுபட்டவை.
இவற்றை உயரியில் விஞ்ஞானிகள் “மிஸோஃபோனியாவால்” பாதிக்கப்பட்டோர் 22 பேர், பாதிக்கப்படாதோர் 22 பேர் என பிரித்து அவர்கள் மூளைகளை ஸ்கேன் செய்து ஆராய்ந்தனர்.
அதில் மழை சத்தம், உணவு உண்ணும் சத்தம், சுவாச ஒலிகள் போன்ற விரும்பத்தகாத ஒலிகளைக் கேட்க வைத்தார்கள். அதில் எரிச்சலூட்டும் சத்தத்தை யாரும் ரசிக்கவில்லை.
ஆனால் இந்த வியாதியால் பாதிப்படைந்தோர் உடல் வியர்க்கத் துவங்கியது. மேலும், அவர்களின் இதயத் துடிப்பு அதிகாரித்துள்ளது.
அந்நேரத்தில் அவர்களின் மூளையின் இணைப்புகள் வலுவாகச் செயல்படுகிறது. மூளையின் முன்பகுதியில் உள்ள இன்சுலின் கோர்டெக்ஸ் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
இலங்கை போன்ற நாடுகளில் இந்நோயைப் பொருட்படுத்துவதில்லை. இதை சரி செய்ய மனநல மருத்துவர்களும் உளவியலாளர்களும் சத்தத்தின் விளைவாக ஏற்படும் பதற்றம் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றை சீர் செய்ய உதவுகின்றனர்.