தன்னம்பிக்கை வெற்றியின் விதை. வாழ்வில் வெற்றி கொள்ள தன்னம்பிக்கை (self confidence) என்பது கட்டாயம் தேவையான ஒன்று.
நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ சவால்களை சந்தித்து வருகிறோம். அந்த சவால்களை எதிர்கொள்ள நாம் நமக்குள் வைத்திருக்க வேண்டிய ஒரே ஆயுதம் தன்னம்பிக்கை (self confidence) தான்.
சரி கொஞ்சம் தெளிவா பேசலாம் வாங்க.
தன்+நம்பிக்கை=தன்னம்பிக்கை. நம்ம மேல நாம வெக்கிற நம்பிக்கைக்கு பேரு தாங்க நம்பிக்கை. நம்ம மேல நமக்கு தாங்க மொதல்ல நம்பிக்கை வரணும்.
சரி நம்ம மேல நாம எப்படி நம்பிக்கை வைக்கிறது?
மொதல்ல நாம நம்மள ஏத்துக்கணும். அதாவது நான் இப்டி இருக்கேன், அப்டி இருக்கேன், கலரா இல்ல, அழகா இல்ல, குள்ளமா இருக்கேன் இப்டிலாம் யோசிக்க கூடாது.
நாம எப்படி இருக்கிறோமோ அப்டியே நாம நம்மள ஏத்துக்கணும். மொதல்ல நாமளே நம்மள லவ் பண்ணனுங்க. இந்த உலகத்துல பொறந்த எல்லாருமே சிறப்பானவங்கதான்.
எல்லாருக்குள்ளயும் ஏதோ ஒரு திறமை ஒளிஞ்சிட்டுதான் இருக்கு. ஆனா அத நாமதான் கண்டுபிடிக்கணும். அந்த திறமைல நாம சாதிக்கணும். அப்டி சாதிக்கறதுக்கு தன்னம்பிக்கை இருக்கணும்.
எந்த ஒரு காரியம் செஞ்சாலும் அடுத்தவங்கள எதிர்பாக்காதிங்க. சரியோ தவறோ உங்க மனசு சொல்றத செய்ங்க. சரியா இருந்தா வெற்றி, அதுவே தவறா இருந்தா அது பாடம்.
எதுவானாலும் நல்லது தானே. நாம நெனச்சத சாதிக்கணும்னா எதுக்காகவும் சோர்ந்து போகக்கூடாது. அப்டி சோர்ந்து போகாம முன்னாடி போயிட்டே இருக்கணும்னா தன்னம்பிக்கை நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.
தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்க்கொண்டு வெற்றி காண்போம். மீண்டும் வேறு ஒரு கட்டுரையில் சந்திக்கிறேன்….