வெள்ளை நிறம் பறவைகளுக்கு எச்சரிக்கை மணி என நேசனல் ஒயில்ட் லைப் ரிசர்ச் சென்டர் தெரிவித்துள்ளது. விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது?
பஸ், கார், சைக்கிள், பைக், லாரி மற்றும் மெட்ரோ ட்ரைன் வரை ஜிகுஜிகு என ஜிகுனா தடவியதுபோல் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் நம்மை கடந்து செல்லும்.
ஆனால் ஒரே ஒரு ஊர்தி மட்டும் பல வருடங்களாக ஒரே கலரில் நம்மை கடந்து செல்வதை கவனித்தது உண்டா?
விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது?
விமானங்கள் பொதுவாக வெள்ளை நிறத்தில் அதிகம் காணப்படும். தரையில் ஊறும் ஊர்திகளுக்கே கலர் கலராக பெயிண்ட் பூசும்போது, பலகோடி மதிப்புள்ள விமானம் ஏன் கலர் வண்ணத்தில் இருப்பதில்லை?
விமானத்தில் வெள்ளை வண்ணம் குறைய குறைய, அந்த விமானத்திற்கு ஆபத்துக்கள் அதிகம். அப்படி என்ன ஆபத்து?
வண்ணத்திலேயே கருப்பு வண்ணம் அதிக வெப்பத்தை கவரக்கூடியது. ஆனால் வெண்ணிறம் வெப்பத்தை கவர்ந்து இழுக்காது. இதனால் விமானம் அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாக்கப்படும்.
அல்ட்ராடெக் வயலெட் (புற ஊதா) கதிர்களால் வெள்ளை நிறம் எளிதில் வெளுக்காது. நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும். அதனால் விமானத்திற்கு அடிக்கடி வண்ணம் பூசும் செலவு குறையும்.
விமானத்திற்கு ஒருமுறை வண்ணம் பூச 50 லட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெள்ளை நிறத்தால் உயிரிழப்பும் தவிர்க்கப்படும்.
வெள்ளை நிறம் பறவைகளுக்கு எச்சரிக்கை மணி
வெள்ளை நிறம் பறவைகளை எச்சரிக்கை செய்யும். குறைவான ஒளியில் கூட கண்ணுக்குப் புலப்படும்.
இதனால் பறவைகள் விமானத்தின் மீது மோதுவது தவிர்க்கப்படும். நேசனல் ஒயில்ட் லைப் ரிசர்ச் சென்டர் 2011-ல் விமானத்தை பற்றிய ஆய்வுக்கட்டுரை வெளியிட்டது.
அதில், வண்ணங்கள் அதிகம் உள்ள விமானங்களை விட, வெள்ளை நிற விமானங்களில் பறவைகள் மோதுவது குறைவாகவே நிகழ்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் பல பறவைகள் அழிந்து வரும் நிலையில், விமானங்கள் வெள்ளைநிறத்தில் பறக்கவிட்டு பறவைகளின் இறப்பை கட்டுப்படுத்துவது சற்று ஆரோக்கியமான விஷயம்.