Home சிறப்பு கட்டுரை தலைவலி ஏன் உண்டாகிறது? ஜில்லுன்னு சாப்பிட்டால்!

தலைவலி ஏன் உண்டாகிறது? ஜில்லுன்னு சாப்பிட்டால்!

430
0
குளிர்பானம் சாப்பிடுவதால் தலைவலி ஏன் உண்டாகிறது?

தலைவலி ஏன் உண்டாகிறது ஜில்லுன்னு சாப்பிட்டால்? குளிர்ந்த பொருள், குளிர்பானம் சாப்பிடுவதால் தலைவலி ஏன் உண்டாகிறது? தலைவலி ஏற்பட காரணம் என்ன?

கோடை வெயில்

வெய்யில் காலம் ஆரம்பிக்க இருக்கிறது. பொதுவாக வெயில் காலங்களில் தான் அதிகப்படியான தலைவலி உண்டாகும்.

அதற்கு காரணம் வெயில் காலங்களில் வெயிலின் கொடுமை தாங்காமல் தலைவலி உண்டாகாது. நாம் உட்கொள்ளும் உணவே இதற்கு காரணம்.

குளிர்ந்த பொருள், குளிர்பானம், ஐஸ்கீரீம் போன்றவற்றை அதிக குளிருடன் அடிக்கடி சாப்பிடுவதன் காரணமாக தலைவலி ஏற்படுகிறது.

தலைவலி ஏற்பட காரணம் என்ன?

குளிர்ந்த பொருள் சாப்பிட்டால் தலைவலி ஏற்பட காரணம் என்ன?வெளியிலில் சென்றுவிட்டு வந்தவுடன் நாம் உட்கொள்ளும் குளிர்ந்த தண்ணீர், குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்றவற்றால் தான் தலைவலி உண்டாகிறது.

இது மூளையை முடக்கம் செய்யும் அல்லது மந்தமடையச் செய்யும். சில நேரங்களில் அதிகப்படியான தலைவலியை உண்டாக்கும்.

இதற்கு காரணம் வேகமாக அல்லது அதிகப்படியாக குளிர்ந்த உணவுகளையோ அல்லது குளிர்ந்த தண்ணீரையோ உட்கொள்வதே ஆகும்.

உடலில் ஏற்படும் விளைவுகள்

குளிர்ந்த உணவுகளை உட்கொள்ளும்போது அது முதலில் தொண்டை நரம்புகளில் ஒருவித சிலிர்ப்பை உண்டாக்கும்.

தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது இரத்த நாளங்களில் வீக்கத்தை உண்டாக்கும் அல்லது தொண்டையின் மேல்பகுதியில் ஒரு வகையான வலியை ஏற்படுத்தும்.

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடமும் இதற்கான அறிகுறிகளை நாம் காண முடியும்.

தலைவலி ஏற்படாமல் தடுப்பது எப்படி?

1. வெய்யில் காலங்களில் அதிகம் குளிர்ந்த உணவுகளையோ தண்ணீரையோ உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

2. இடைவெளி விட்டு எடுத்துக் கொள்வது உகந்தது. ஒரே நேரத்தில் அதிகம் உட்கொள்ளாமல் பகிர்ந்து உட்கொள்ளுதல் நல்லது.

3. முடிந்தவரை குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து விடுதல் மிகவும் நல்லது.

Previous articleகுடியுரிமை சட்டம் அமல்; ஆதரவளித்த பூபேந்தர் சிங் ஹூடா
Next articleநெற்றிக்கண் 2: ரஜினி-மேனகா பதில் தனுஷ்-கீர்த்திசுரேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here