17/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
மேஷ ராசிபலன்
இன்று ஆன்மீக வழிபாடு அவசியம். பக்தி மட்டுமே உங்களின் நாளை மாற்றும். பணியில் நல்ல ஈடுபாடு இருக்கும்.
வீட்டில் பொறுமை அவசியம். பண புழக்கம் குறைவாக இருக்கும். தலைவலி வர வாய்ப்புண்டு.
முருகன் வழிபாடு நன்மை அளிக்கும்.
ரிஷப ராசிபலன்
இன்று மிகவும் முக்கியமான தீர்மானங்களை தவிர்க்கவும். பிராத்தனை நல்ல பலன்களை தரும்.
பணியில் இன்பமான சூழல் இருக்காது. வீட்டில் குழப்பமான சூழல் நிலவும். பணவரவு பெரிதாக இருக்காது. கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.
அங்காரக பகவானிற்கு விளக்கேற்றி வழிபட துன்பங்கள் தீரும்.
மிதுன ராசிபலன்
இன்று லாபகரமான நாளாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியில் உற்சாகமான சூழல் இருக்கும்.
இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரச்சனைகள் தீரும். தன லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை.
முருகப்பெருமான் வழிபாடு கூடுதல் பலன்களை தரும்.
கடக ராசிபலன்
இன்று சிறப்பான நாளாக இருக்கும். சிறந்த அறிவாற்றலுடன் இருப்பீர்கள். பணியில் திறம்பட செயலாற்றுவீர்கள்.
குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். தேவையான பணம் வந்து சேரும். உடல் ஆற்றல் மேம்படும்.
காளியம்மனை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
சிம்ம ராசிபலன்
இன்று பரப்பரப்புடன் இருப்பீர்கள். தியானம் அவசியம் தேவையாகும். தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
பணியில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். பண இழப்பு ஏற்படலாம். முதுகுவலி ஏற்பட வாய்ப்புண்டு.
அங்காரக பகவானை விளக்கேற்றி வழிபட கவலைகள் தீரும்.
கன்னி ராசிபலன்
இன்று இன்ப துன்பங்கள் கலந்த நாளாக இருக்கும். நாள் இறுதியில் வெற்றி கிடைக்கும்.
பணியில் உழைப்பு தேவையாகும். வீட்டில் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வரவும் செலவும் சமமாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு.
துர்கையை விளக்கேற்றி வழிபட நன்மைகள் வந்து சேரும்.
துலா ராசிபலன்
இன்று பயணங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பொறுமையாக இருங்கள். பணியில் வெற்றி கிடைக்க முயற்சிகள் அவசியம்.
உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இருப்பதை வைத்து இன்பமான வாழ்க்கை வாழ்வும். வீட்டில் தாய் தந்தை ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிவபெருமானை வழிபட கவலைகள் குறைந்து விடும்.
விருச்சிக ராசிபலன்
இன்று சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை மூலம் வெற்றி காண்பீர்கள்.
காதல் வலுவாக இருக்கும். பேச்சில் மட்டுமே கவனம் தேவை. வருமானம் சிறப்பாக இருக்கும். சூடு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்.
மாரியம்மனை விளக்கேற்றி வழிபட பிரச்சனை தீரும்.
தனுசு ராசிபலன்
உங்கள் சிந்தனையை கேளிக்கையில் செலுத்தவும். அன்பான பேச்சு வார்த்தை அவசியம். பணி சாதகமான இருக்காது.
குடும்பத்தில் கருத்து வேறுபாடு வரும். தேவையற்ற செலவுகள் வரலாம். இறை வழிபாடு அவசியம். தோல் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.
முருகப்பெருமானை வழிபட பிரச்சனை குறையும்.
மகர ராசிபலன்
இன்று பொறுப்புகளை முடிப்பதில் கவனமாக இருப்பீர்கள். சக பணியாளர்கள் இடைய சர்ச்சைகள் ஏற்படும்.
துணையிடம் நல்லுறவு இருக்காது. மோதல்கள் ஏற்படலாம். பணவரவு முன்பை விட குறையும். கால் வலி ஏற்படலாம்.
ராகு பகவானை தீபமேற்றி வழிபடுங்கள்.
கும்ப ராசிபலன்
இன்று இன்பத்தை வழங்கும் நாளாகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணியில் பாராட்டுகள் குவியும்.
துணையுடன் வெளியிடங்கள் சென்று வருவீர்கள். தொழிலால் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் குறையில்லை.
நாக தேவதையை விளக்கேற்றி வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.
மீன ராசிபலன்
பணிகள் அதிகமாக இருக்கும். நாள் முழுதும் உழைக்க வேண்டிய நிலை இருக்கும். பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும்.
குடும்பத்தில் வாயால் பிரச்சனைகள் குவியும். பணவரவு போதுமானதாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
துர்கையை விளக்கேற்றி வழிபடுங்கள் கவலைகள் தீரும்.
17/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.