Home ஆன்மிகம் 22/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

22/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

544
0

22/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று மிகவும் பிரமாதமான நாள். உங்களின் முயற்சிகள் வெற்றியில் முடியும். குடும்பத்தில் அன்பாக இருப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சூரிய தரிசனம் செய்ய கூடுதல் பலன்கள் இருக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையுடன் நல்லுறவு மேம்படும். அதிக பணவரவு இருக்கும். உடலாற்றல் மேம்படும்.

சிவபெருமானை வழிபட கூடுதல் பலன்களை பெறுவீர்கள்.

மிதுன ராசிபலன்

இன்று சற்று ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். பணியில் திருப்தியாக ஈடுபட இயலாது. குடும்ப பிரச்சனைகள் தோன்றும். தனலாபம் குறைவாக இருக்கும். பல் வலி வர வாய்ப்புண்டு.

அனுமனை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டு.

கடக ராசிபலன்

இன்று குழப்பமான நாளாக இருக்கும். பணியிடத்தில் மந்தமான சூழல் நிலவும். வீட்டில் அமைதி குறையும். பணத்தால் பிரச்சனைகள் வரும். பொருளாதார நிலை தொய்வடையும். கண் பிரச்சனைகள் வரலாம்.

சூரிய பகவானை விளக்கேற்றி வழிபடுங்கள்.

சிம்ம ராசிபலன்

இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நாள். பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் துணையிடம் நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பெருமாளை வழிபட கூடுதல் பலன்களை பெறலாம்.

கன்னி ராசிபலன் 

இன்று இன்பமான நாளாக இருக்கும். பணியில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தன லாபம் நன்றாக இருக்கும். உடல் வலுவாக இருக்கும்.

பிரம்ம தேவரை வழிபட கூடுதல் பலன்களை பெறலாம்.

துலா ராசிபலன்

இன்றைய நாள் அதிக பலன்களை தரும். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி காதல் மேம்படும். ஆன்மீக செலவுகள் வரும். உடல் நலனில் குறையில்லை.

அனுமனை விளக்கேற்றி வழிபட கூடுதல் பலன்களை பெறலாம்.

விருச்சிக ராசிபலன்

இன்று உணர்ச்சி வச படுதலை தவிர்க்கவும். வேலையில் கவனமாக இருக்கவும்.  குடும்ப சுப காரிய பேச்சுகளை தள்ளி போடவும். பண புழக்கம் குறையும். தோல் பிரச்சனைகள் வரலாம்.

பைரவரை விளக்கேற்றி வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.

தனுசு ராசிபலன்

இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பணியில் நன்மதிப்பு பெறுவீர்கள். காதல் திருமணம் கைகூடும். பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சூரியனை வழிபட கூடுதல் பலன்களை பெறலாம்.

மகர ராசிபலன் 

இன்று சுமாரான நாளாக இருக்கும். பணியில் குழப்பமாக இருக்க வாய்ப்புண்டு. வீட்டில் கவனமாக பேசவும். தன லாபம் மந்தமாக இருக்கும். கால்களில் பிரச்சனைகள்  வரலாம்.

சரபேஸ்வரர் வழிபாடு நற்பலன்கள் அளிக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று பதட்டமான சூழல் நிலவும். தியானம் அவசியம். பணிசுமை அதிகமாக இருக்கும். உறவினர்களால் பிரச்சனைகள் வரலாம். செலவு அதிகரிக்கும். பணியால் சோர்வுடன் இருப்பீர்கள்.

அம்பிகையை விளக்கேற்றி வழிபட நன்மைகள் வரும்

மீன ராசிபலன் 

இன்று மனம் அமைதியாக இருக்காது. தொழில் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நட்புணர்வுடன் பேசுங்கள். பண இழப்பு ஏற்படலாம். முதலீடுகளை தவிர்க்கவும்.வயிறு கோளாறுகள் ஏற்படலாம்.

பைரவரை வழிபட கவலைகள் குறையும்.

22/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleஅண்ணாத்தாவே முடியல அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா?
Next articleரஜினிகாந்தின் வீடியோவை நீக்கியது ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here