கிறிஸ்தவம் – Christianity: கிறிஸ்தவ மத வரலாறு & பிரிவுகள் பற்றி காண்போம். கிறிஸ்தவம் உலக அளவில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாகும்.
உலகளவில் 2.3 மில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவி உள்ளனர். இவர்கள் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் போதனைகளை பின்பற்றி வருகிறார்கள்.
கிறிஸ்தவ மதம்
இயேசு கிறிஸ்து மற்றும் அவரின் அப்போஸ்தலர்களுடன் தான் கிறிஸ்தவம் உருப்பெற்றது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு இவற்றை மையமாககொண்டது இந்த மதம்.
மேலும் இம்மதம், கிறிஸ்துவின் படிப்பினைகளை கிறிஸ்தவர்கள் கற்றுக்கொண்டு, அவற்றின் படி வாழ கற்றுக்கொடுத்து, மக்களை அதன்படி வழிநடத்துகிறது.
கிறிஸ்தவத்தின் ஆரம்பம்
இயேசுவின் இறப்பிற்குப் பின்னர் 1-ம் நூற்றாண்டில் யூதேயாவில் யூத மக்களின் ஒரு பிரிவாக கிறிஸ்தவம் தொடங்கியது. ஆனால் இது ரோமானிய பேரரசு முழுதும் மிக விரைவில் பரவியது.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பின்பற்றியவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். இருப்பினும் எண்ணிக்கையில் பெருகி, விரைவிலேயே யூதேயாவின் மாநில மதமாக கிறிஸ்தவம் மாறியது.
5-15ம் நூற்றாண்டுகள் வரையிலான காலகட்டத்தில், கிறிஸ்தவம் தெற்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் அதிகமாகப் பரவியது. தற்போது உலகெங்கும் பரவி, உலகத்தில் மிகப்பெரிய மதமாக உள்ளது.
மதத்தில் இருந்த சட்ட திட்டங்கள் எல்லோராரும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் சச்சரவுகளும், பிளவுகளும் எழுந்ததால், ரோமன் கத்தோலிக்கம், கிழக்கு ஆர்த்தடாக்ஸ், ஓரியண்டல் ஆர்த்தடாக்ஸி, ப்ரோட்டஸ்டண்ட் ஆகிய 4-கிளைகளாக உள்ளது.
முதல் கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் இனரீதியாக யூதர்கள் அல்லது வேறு இனத்தவரிலிருந்து மதம் மாறியவர்கள். யூதர்களிடமிருந்து ஆரம்பகால கட்டத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.
அது, வேறு இனத்தை சேர்ந்தவர்கள் முதலில் யூதர்கள் ஆக வேண்டும். பின்னரே கிறிஸ்தவ மதத்தை தழுவ வேண்டும் என்பதாகும் ஆனால் புனித பீட்டர் (st.peter) இதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் பிளவுகள் வெடித்தன. கிறிஸ்தவம் 4 பிரிவுகளாக இருந்தாலும் அவர்களின் வழிபாட்டு முறைகளில் மட்டுமே வேறுபடுகின்றனர். கிறிஸ்தவத்தின் மையப்புள்ளி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான்.