Home ஆன்மிகம் காய்ச்சலை போக்கும் திருநீலகண்ட பதிகம்! ஜுரத்தை விரட்டும் ஜுரஹரேஸ்வரர்!

காய்ச்சலை போக்கும் திருநீலகண்ட பதிகம்! ஜுரத்தை விரட்டும் ஜுரஹரேஸ்வரர்!

421
0

திருநீலகண்ட பதிகம்: காய்ச்சலை விரட்டி அடிக்கும் திருநீலகண்ட பதிகம். ஜுரத்தை போக்கும் ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில். திருச்செங்கோடு ஜுரஹரேஸ்வரர் சன்னதி.

தோடுடைய செவியன் என்று பாட துவங்கிய அம்பிகையின் ஞானப்பால் உண்ட ஞானசம்பந்த பெருமான் இறைவனை துதித்துப் பாடி மக்களின் பல்வேறு பிணிகளை போக்கியுள்ளார் என்பது பலரும் அறிந்த ஒன்று.

அந்த வகையிலே உடல் சூட்டால் ஏற்படும் காய்ச்சலில் இருந்து மக்களை காத்து அருளிய பதிகத்தை பற்றியும். ஈசனின் திருவடிவமான ஜுரஹரேஸ்வரர் பற்றியும் பலரும் அறியாத ஒரு விடயமாகும்.

திருநீலகண்ட பதிகம்

ஒரு முறை ஞானசம்பந்தர் கொடிமாட செங்குன்றம் என்று இலக்கியங்களில் கூறப்படுள்ள திருசெங்கோட்டிற்கு யாத்திரை முடிந்து வந்த போது அங்கிருந்த மக்கள் அனைவரும் குளிர் ஜுரத்தினால் பெருதும் அவதிப்பட்டு மாண்டும் போய் இருந்தனர்.

ஞானசம்பந்தருடன் வந்த அடியார்களையும் காய்ச்சல் தாக்கி அவதிப்பட்டு வந்தனர்.
மக்களின் இத்துயரை கண்ட ஞானசம்பந்தர்

“அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்”

என துவங்கும் திருநீலகண்ட பதிகத்தை செங்கோட்டிலே பாடி மக்கள் துயர் நீக்க மன முருகி வேண்டினார். மாதொரு பாகனார் செவி சாய்த்து மக்களின் குளிர் ஜுரத்தை போக்கினார். அனைவரும் நலம் பெற்றனர்.

ஜுரத்தை போக்கும் ஜுரஹரேஸ்வரர்

செங்கோட்டிலே சம்பதரின் பதிகம் கேட்டு ஜுரத்தை போக்கிய நாதருக்கு ஜுரஹரேஸ்வரர் என்ற திருநாமத்தில் சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.

இன்றளவும் மக்கள் ஜுரத்தை போக்க வேண்டி இங்கு வந்து திருநீலகண்ட பதிகத்தை பாடி துதிக்கின்றனர்.

ஏக முகத்துடன் மூன்று திருக்கரங்களும் மூன்று திருவடிகளும் தாங்கி ஜுரஹரேஸ்வரர் திருக்காட்சி புரிகின்றார்.

இவரை வணங்கினால் அனைத்து காய்ச்சலும் நீங்கி நல்வாழ்வு அருளிவருகின்றார்.

நாம் என்னதான் பல்வேறு சிகிச்சைகளை பெற்று கொண்டாலும் இறைவனின் துணையோடு செய்தால் விரைவில் குணம் பெறுவோம் என்பது நம்பிக்கை கலந்த உண்மை ஆகும்.

காய்ச்சல் என்கின்ற கடும் பிணியால் மக்கள் அவதிப்பட்டு வரும் இக்காலத்தில் மக்கள் அனைவரும் ஒருமனதாக வீட்டில் இருந்த படியே ஜுரஹரேஸ்வரரை பிராத்தனை செய்து திருநீலகண்ட பதிகம் பாடி சுகமான வாழ்வினை பெறுவோம்.

“லோகா சமஸ்தா சுகினோ பவந்து, சர்வே ஜனா சுகினோ பவந்து”

Previous articleஒரு வாரத்தில் 5 மில்லியன் வியூஸ் பெற்ற காட்டுப் பயலே பாடல் லிரிக்!
Next articleநவராத்திரி முதல் நாள் 2020: வியர்வை முத்துகள் கொட்டும் வனதுர்கா பரமேஸ்வரி ஆலயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here