கால பைரவாஷ்டமி 2020: சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர் திருக்கோவில். அதியமானால் கட்டப்பட்ட தனி கால பைரவர் கோவில். காசிக்கு இணையான அதியமான் கோட்டை தட்சிண காசி பைரவர்.
கலியுகத்தில் நன்மைகளை விட தீமையே தலைத்தோங்கி நிற்கும். அப்படிப்பட்ட இந்த யுகத்தில் பகைவர்களால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் துயரங்களை அதிகமாகவே காணப்படும்.
பொறாமை, கோபம் வஞ்சகத்தால் ஏற்படும் பகைமையை போக்கி நல்வாழ்வு அருளும் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர் ஆவார்.
சேத்திர பாலகராக அனைத்து சிவன் கோவில்களிலும் விளங்குபவர் பைரவர் ஆவார். இவர் பரமேஸ்வரரின் ருத்ர அவதாரமாக கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் அவதரித்தவர்.
கால பைரவருக்கு இந்தியாவில் காசியில் தனி திருக்கோவில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்து தமிழகத்தில் தர்மபுரியில் மட்டுமே தனி திருக்கோவில் உள்ளது.
சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர்
தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தவர் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவார்.
இவர் கடையைழு வள்ளல்களில் ஔவைக்கு நெல்லிக்கனி அளித்த வள்ளல் ஆவார்.
இவர் சிறுபகுதியை ஆண்டு வந்த சிற்றரசர் ஆவார். இவருக்கு பேரரசர்களால் இன்னல்கள் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
இதனால் தன்னை சத்ருக்கள் நெருங்கா வண்ணம் இருக்க வேண்டி குருமார்களிடம் ஆலோசனை வேண்டினார். அவர்களின் ஆலோசனைப்படி காசியில் இருந்து கால பைரவரை கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஆயத்தமானர்.
தமது வீரர்களை அனுப்பு காசியில் இருந்து கால பைரவரை எடுத்து வர சொல்லிவிட்டு கோவில் கட்ட துவங்கினார்.
கால பைரவர் விக்ரகம் வந்ததும் , கோவில் திருப்பணி நிறைவும் ஒரே நேரத்தில் பூர்த்தியானது. அதன் பின் பைரவரை பிரதிட்டை செய்தார்.
கருவறை விதானத்தில் நவநாயகர்களை வடித்து பைரவரை நடுநாயகமாக பிரதிட்டை செய்து வழிப்பட்டார்.
அன்று முதல் தட்சிண காசி பைரவர் என்ற திருநாமத்தோடு இரண்டு திருக்கரத்தோடு கையில் திரிசூலமும் கபாலமும் தாங்கி திருக்காட்சி புரிகிறார். சத்ருக்களை அழிப்பவர் என்பதால் வாளும் இவருக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பைரவர் அஷ்டமி தினத்தில் அவதரித்தவர் என்பதால் இவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்கள் உகந்த நாட்கள் ஆகும்.
இங்கே ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிறப்பு பூஜைகளும், ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் மிளகாய் வற்றல் மற்றும் மிளகினை சிறப்பு யாகங்கள் நடைபெறுகிறது.
இவருக்கு பூசணிக்காய், தேங்காய் மற்றும் மிளகு முடிச்சினை கொண்டு விளக்கேற்றி நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர் பக்தர்கள்.
தமிழகம், கர்நாடகம் என அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் வருகின்றது. காலபைரவாஷ்டமி தினத்தில் தேர் திருவிழா நடைபெறுகிறது.
வியாபார முடக்கம், எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சினை, திருமணத்தடை, குழந்தையின்மை என அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து அருள் புரிகிறார் தட்சிண காசி பைரவர்.
அனைவரும் கால பைரவரின் ஜெயந்தி விழாவான “கால பைரவாஷ்டமி” ஆன இன்று (07/12/2020) அனைவரும் தர்மபுரி அதியமான் கோட்டை ஸ்ரீ தட்சிண காசி பைரவரை சென்று வழிப்பட்டு அவர் அருள் பெறுவோம்.
அமைவிடம்: ஸ்ரீ தட்சிண காசி பைரவர் திருக்கோவில், அதியமான் கோட்டை, தர்மபுரி.
தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.