பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் சிறப்புகள், பெரிய பிராட்டி திருநட்சத்திர வைபவம், கணவன் மனைவி சண்டைகளை நீக்கும் சேர்த்தி சேவை தரிசனம்.
வைணவத்தில் திருமாலிற்கு பல்வேறு மாதங்களில் விழாக்களும் பிரம்மோற்சவமும் கொண்டாடப்படுகிறது.
பிரம்மோற்சவம் என்பது ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவாகும். இது பிரம்ம தேவரால் புவியில் திருமாலிற்கு எடுக்கப்பட்ட விழா ஆதலால் “பிரம்மோற்சவம்” எனப்படுகிறது.
இதில் பங்குனி மாதம் பங்குனி உத்திர பிரமோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் பங்குனி பிரம்மோற்சவம் தான் முதன் முதலில் பிரம்ம தேவரால் ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்பட்ட விழா என்று ஸ்ரீரங்கம் தலபுராணம் கூறுகிறது.
எனவே இதை “ஆதி பிரம்மோற்சவம்” என்று கூறுகின்றனர்.
பங்குனி உத்திர பிரம்மோற்சவம்
திருச்சி காவிரி கரையில் அமைந்துள்ள பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவமானது வெகும் விமர்சியாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இதில் தினமும் நம்பெருமாள் பல்வேறு சேவைகளில் திருச்சுற்று மற்றும் மாட வீதிகளில் உலா வருவார்.
முக்கிய சேவையாக நம்பெருமாள் சோழர் திருமகளான உறையூர் கமலவல்லி நாச்சியாரை காணச் செல்வார்.
அன்று நம்பெருமாள் மணமகன் போன்று அலங்காரம் செய்து கொண்டு உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சிக்கு தான் அணிந்த மாலைகள், புத்தாடை, சந்தனம், திலகம் ஆகியவற்றை தருவார்.
கமலவல்லி சூடய மாலையை நம்பெருமாள் சூடிக்கொண்டு இருவரும் தம்பதி சமேதராக பக்தர்ளுக்கு காட்சி தருவார்கள்.
பெரிய பிராட்டி திருநட்சத்திர வைபவம்
ஸ்ரீரங்கத்தின் ராணி ரங்கநாதரின் மனைவியான பெரிய பிராட்டி என்று அழைக்கப்படும் ரங்க நாயகி தாயார் சமுத்திர ராஜனுக்கு காவிரிதாய்க்கும் மகளாக பங்குனி உத்திரத்தில் அவதாரம் செய்தார்.
எனவே இந்த பங்குனி உத்திரமானது இன்னும் சிறப்படைகிறது. ஸ்ரீரங்கத்தில் தனது சன்னதி மற்றும் பிரகாத்தை விட்டு ரங்கநாயகி தாயார் வெளியே சென்று உற்சவம் காணமாட்டார்.
அனைவருக்கும் தாயாக விளங்கும் பார்கவி ஆவாள். பங்குனி உத்திர அவதார திருநாளில் அன்னையை தரிசிப்பது மிக சிறந்த பலன்கள் தரும்.
நம்பெருமாள் பெரிய பிராட்டி சேர்த்தி சேவை
உறையூரில் கமலவல்லியை காண சென்றதால் பெரிய பிராட்டியான ரங்கநாயகிக்கு கோபம் வந்து நம்பெருமாளை தன் சன்னதிக்குள் அனுமதிக்காமல் கதவை சாற்றி கொள்ளும் ஊடல் சேவையானது ஒன்பதாம் நாள் நடைபெறும்.
அதன் பின் ஊடல் நீங்கி பங்குனி உத்திர தினத்தில் நம்பெருமாளும் பெரிய பிராட்டியும் ஒன்றிணைந்து தம்பதி சமேதாராக சேர்த்தி சேவையில் காட்சி அளிக்கிறார்கள். இந்த நிகழ்வு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாகும்.
கணவன் மனைவி பிரச்சனைகள் நீக்கும் சேர்த்தி சேவை
கணவன் மனைவியான பெருமாளும் தாயாருக்குமே பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சமாதானம் ஆகிய பின் சேர்த்தி சேவை காண்கின்றனர்.
சாதாரண மனிதர்களான நம் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனையால் பிரிந்து இருந்தால் அவர்கள் சென்று இந்த சேர்த்தி சேவையை கண்டு வேண்டினால் பிரச்சனைகள் நீங்கி மீண்டும் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை கலந்த உண்மையாகும்.
2020-இல் சேர்த்தி சேவை
இந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பங்குனி உத்திரத்தில் நம்பெருமாள் மற்றும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெருமாள் கோவிலிலும் தாயாருடன் பெருமாளுக்கு சேர்த்தி சேவை நடைபெறும்.
ஸ்ரீரங்கம் செல்ல இயலவில்லை என்றாலும் அவரவர் ஊரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சேர்த்தி சேவையை கண்டு பிராத்தனை செய்து கொண்டு குடும்ப பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வோம்.
wonderful information