Kanika Kapoor; 5 முறை கொரோனா உறுதியாகியும், கனிகா எப்படி குணமானார்? கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனிகா கபூர் குணமடைந்த நிலையில் மருத்துவனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த மார்ச் 9 ஆம் தேதி பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் லண்டனிலிருந்து மும்பை திரும்பினார். அங்கிருந்து லக்னோ சென்ற அவர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதே நிகழ்ச்சியில்தான் அரசியல் பிரலங்கள், நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், அவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், விருந்து நிகழ்ச்சியில், கனிகா கபூருடன் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் ஆகியோருக்கு அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவர் உடல்நிலை சமநிலையில் இருப்பதாகவும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கனிகா கபூருக்கு 6ஆவது முறையாகவும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து கனிகா கபூர் முற்றிலும் குணமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். மேலும், அவரை வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.