Home ஆன்மிகம் ஆடி மாத தரிசனம் 12: பேசாத பிள்ளைகளை பேச வைக்கும் பேச்சியம்மன்!

ஆடி மாத தரிசனம் 12: பேசாத பிள்ளைகளை பேச வைக்கும் பேச்சியம்மன்!

1
448

ஆடி மாத தரிசனம் 12: பேசாத பிள்ளைகளை பேச வைக்கும் பேச்சியம்மன். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பேச்சியம்மன் திருக்கோவில். மதுரை மாநகரின் புகழ்பெற்ற பேச்சியம்மன் ஆலயம்.

சிவத்தின் இடப்பாகம் அமர்ந்த அன்னை பார்வதி தேவி பல்வேறு ரூபங்கள் எடுத்து பல திருக்கோவில்களில் கோவில் கொண்டுள்ளாள்.

சாதாரண மானுட பெண்ணாக பிறந்து தியாகத்தால் தெய்வமான பெண் சக்தியே பேச்சியம்மன் ஆவாள்.

மதுரையினை ஆட்சி புரியும் அன்னை மீனாட்சியின் மாநகரில் பல்வேறு சக்தி திருத்தலங்கள் அமைந்துள்ளன.

அதில் பேச்சு வராத பிள்ளைகளை பேச வைக்கும் அன்னையாக விளங்குபவளே பேச்சியம்மன் ஆவாள்.

திருக்கோவில் வரலாறு

மதுரை மாநகரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட திருக்கோவில் பேச்சியம்மன் ஆலயம் ஆகும். வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது பேச்சியம்மன் திருக்கோவில்.

இங்கே பேச்சியம்மன் சுயம்புவாக இருப்பது இன்னும் விஷேசமான ஒன்று.

ஆறடி உயரத்தில் மிகவும் கம்பீரமாக வலது கை ஓங்கியும் இடது கையில் குழந்தையை கொண்டும் காட்சி தருகிறாள் பேச்சியம்மன்.
இக்கோவிலின் தல விருட்சம் ஆலமரம் ஆகும்.

மேலும் விநாயகர், முருகன், மீனாட்சி & சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், கருப்பசாமி, இருளப்பசாமி, ஐயனார், வீரமலை பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர் ஆகியோரின் சன்னதிகள் ஒரே திருக்கோவிலில் அமைந்துள்ளது சிறப்பானதாகும்.

இங்கே அம்மனுக்கு வெள்ளிகிழமை பாலாபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் குங்குமாபிசேகமும் நடைபெறுகிறது. இதை காண பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும்.

பேச்சாற்றல் அளிப்பாள் பேச்சியம்மன்!

பேச்சியம்மனே சரஸ்வதி ஸ்வரூபமாவாள். ஞானத்தை அளிக்கும் அம்பிகையும் ஆவாள்.
குழந்தைகளுக்கு திக்குவாய், சரிவர பேச்சுவராத நிலையில் இருந்தால் இங்கே வந்து அம்மனை தரிசித்து வேண்டி கொண்டால் நிச்சயம் நல்ல பேச்சாற்றலை பெறுவார்கள்.

ராகு-கேது தோஷம், சர்ப தோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் பேச்சியம்மனுக்கு பாலாபிசேகமும், குங்குமாபிசேகமும் செய்து இங்குள்ள நாகர்களையும் வழிபட்டால் தோசங்கள் நிவர்த்தி ஆகும்.

அனைவரும் மதுரை சென்று குழந்தைகளுடன் பேச்சியம்மனை சென்று வழிபட்டு ஞானத்தையும், கல்வியையும் பெறுவோம்.

அமைவிடம்: ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில், படித்துறை, சிம்மக்கல், மதுரை.

தரிசன நேரம்: காலை 06:00 முதல் 12:00 வரை, மாலை 04:00 முதல் 09:00 வரை.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here