Home ஆன்மிகம் ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரலாறு

ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரலாறு

1
615
ரோமன் கத்தோலிக்க திருச்சபை

ரோமன் கத்தோலிக்க திருச்சபை பொதுவாக கத்தோலிக்க திருச்சபை என அறியப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தின் மிகப்பெரிய மூன்று பிரிவுகளில் கத்தோலிக்க திருச்சபையும் ஒன்று.

உலகில் அதிக மக்கள் கொண்ட மதம்

ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸி, ப்ரோட்டஸ்டண்ட் ஆகியவை கிறிஸ்தவத்தின் மற்ற இரு பெரும் பிரிவுகள் ஆகும். கத்தோலிக்க திருச்சபைக்கு போப் என்று அழைக்கப்படும் திருத்தந்தை தலைவராக உள்ளார்.

கிறிஸ்துமஸ் தாத்தா கதை உருவான வரலாறு!

உலகின் பழமையான, மற்றும் மிகப்பெரிய, தொடர்ச்சியாக செயல்படும் சர்வதேச மதமான இது, மேற்கத்திய நாகரிகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டிசம்பர் 2008-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,166,000,000 மக்கள் இப்பிரிவை சேர்த்தவர்களாக உள்ளனர்.

மற்ற கிறிஸ்தவ மதப் பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கர்களும் இயேசுவை தங்களது கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் இரண்டாவது நபராகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

ஷன் மதங்கள்: இந்து மதம் உட்பிரிவு சமயங்கள்!

தலைவர் மற்றும் மத நிலைப்பாடு

கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான பேதுருவின் வழியின் கீழ் வரும் ஆயர்களாலும், குருக்களாலும் வழிநடத்தப்படுவதாகும்.

இங்கு இராயப்பரின் வழியில் வந்தவராக திருத்தந்தை ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது பிரான்சிஸ் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.

கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு என்பது ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது ஆகும். கத்தோலிக்க என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

இதன் மூலப்பொருள் ‘உலகளாவிய அல்லது அனைவருக்கும் பொதுவான’ என்பதாகும். இப்பெயர் திருச்சபையால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபை என்பது, இயேசுகிறிஸ்துவால் உலகம் முழுவதற்கும் நிறுவப்பட்டதாகும். கிறிஸ்தவ சமூகத்தை முதன்முதலில் கத்தோலிக்க திருச்சபை என்று திருத்தூதர் யோவானின் சீடரான அந்தியோக்கு இஞ்ஞாசியார் தான் அழைத்தார்.

புனித பேதுருவின் வழிவருகின்ற திருத்தந்தைக்கு உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் உண்டு என்று ஏற்கும் கிறிஸ்தவ இறைமக்கள் சமூகமே, “கத்தோலிக்க திருச்சபை” என்று வரலாற்றில் அறியப்படுகிறது.

ஆயினும், மரபுவழி கிறித்தவ சபைகளில் சிலவும், ப்ரோட்டஸ்டாண்ட் சபைகளில் சிலவும் “கத்தோலிக்க” என்னும் அடைமொழியால் தம்மை அடையாளப்படுத்துகின்றன.

தோற்றம் மற்றும் வரலாறு

கத்தோலிக்க திருச்சபை இயேசுகிறிஸ்து மற்றும் அவரது பன்னிரண்டு சீடர்கள் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடரான பேதுரு எனப்படும் இராயப்பர் முக்கிய இடம் பெறுகிறார்.

இயேசுவால் தனக்கு பின்னர் தனது மக்களை வழிநடத்தும்படி இராயப்பர் நியமிக்கப்பட்டார்.

இயேசுவிற்குப் பின்னர், திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ளவாறு, வேறுபட்ட போதனைகளுக்கு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பர் மற்றும் அவர் வழிவந்த பாப்பரசர்களின் போதனைகளின்படி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள்.

‘கத்தோலிக்க திருச்சபை’ பெயர் துவக்கம்

‘கத்தோலிக்க திருச்சபை’ என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இன்னாசியாரால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக குறிப்பிடப்பட்டிருந்ததாக அறிஞர்கள் கருதுகிறர்கள். துவக்கத்தில் இந்த திருச்சபை பல இன்னல்களை சந்தித்தது.

ஆரம்பகால நிலவரம்

கி.பி.4-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் உரோமையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி.313-ஆம் ஆண்டு ரோமப் பேரரசர் கான்ஸ்டாண்டைன் வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கான்ஸ்டாண்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி அப்போது திருச்சபையில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட ‘நைசின் விசுவாச அறிக்கை’ (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க மரபு மற்றும் கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டார். இதனை அடுத்து கி.பி.380 ஆம் ஆண்டு துவக்கத்தில் கிறிஸ்தவம், உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.

பல்வேறு வேறுபாடுகளை சந்தித்த கத்தோலிக்கம்

11-ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கம் பெரும் கருத்து முரண்பாட்டை எதிர்க்கொண்டது. பொதுவாக 1054-ஆம் ஆண்டு இந்த வேறுபாடு தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.

இந்த சூழலின்போது தான் கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை, சமயபோதனைகள் சமய கோட்பாடுகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது.

முக்கியமாக இதில் பாப்பரசரின் தலைமை மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு முக்கிய இடம் வகித்தன. இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here