சுக்ரன்: நவகிரகங்களில் தனம், அந்தஸ்து, ஆடம்பரம், அழகு, காதல், திருமணம், வெள்ளி, வைரம் ஆகியவற்றிக்கு அதபதியாக விளக்கக்கூடிய கிரகம் சுக்ரனாவார். இவரே களத்திரகாரகன் எனப்படுகிறார். ஜாதகத்தில் சுக்ரன் உச்சம் பெற்றால் சகல சம்பத்துகளுடன் வாழலாம். ஒவ்வொரு நாளும் கிரகங்களின் ஹோரைகளை அறிந்து செயலாற்றுவது மிகவும் உத்தமமானது. அதிலும் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய சுக்ர ஹோரை என்பது சுப ஹோரையாகும். இதில் அனைத்து காரியங்களும் துவங்கலாம்.
சுக்ர வார சுக்ர ஹோரை வழிபாடு
வெள்ளிக்கிழமை என்பது சுக்ர வாரமாகும். இந்த தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை சுக்ர ஹோரையாகும். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சுக்ர ஹோரையாகும். அதே போல இரவு 8 மணி முதல் 9 மணி வரை சுக்ர ஹோரை வருகின்றது. சுக்ர ஹோரை வழிபாடு செய்ய இந்த நேரம் மிகவும் சிறந்தது.
மகாலட்சுமி வழிபாடு
சுக்ரனின் அதிதேவதையாக விளங்கக்கூடிய தெய்வம் மகாலட்சுமி ஆவார். மகாலட்சுமி வழிபாடு ஜாதகரீதியாக சுக்ரனை பலப்படுத்தும். அதிலும் வெள்ளிக்கிழமை மாலை வேலை சுக்ர ஹோரை வழிபாடானது வாழ்க்கையை மாற்றி அமைக்கும். செல்வ மழையை பொழிய வைக்கும்.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் மகாலட்சுமியை பசு நெய் தீபம் ஏற்றி பன்னீர் கொடுத்து தாமரை மலர்சாற்றி கற்கண்டு நைவேத்தியம் செய்து வழிப்பட்டால் சுக்ரனின் அருளும் மகாலட்சுமியின் அருளும் ஒரே சேர கிடைக்கும் தன வரவு அதிகரிக்கும்.
அதே போல வெள்ளிக்கிழமை வரக்கூடிய பஞ்சமி, பௌர்ணமி தினங்களில் இந்த வழிபாடு செய்வது இரண்டு மடங்கு பலன்களை வாரி வழங்கும்.
மகாலட்சுமி இல்லாத இடங்களே இல்லை சைவ, வைணவம் என அனைத்து திருக்கோவில்களிலும் மகாலட்சுமி தனி சன்னதியில் அருளாட்சி புரிகின்றவர். எங்கு வேண்டுமானாலும் சென்று இந்த வழிபாட்டை செய்யலாம்.
அனைவரும் வாழ்வும் வளமாக வாழ வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் இந்த வழிபாட்டை செய்ய துவங்குங்கள்.