கிருஷ்ணன் கோவில் (Thiruvarppu Krishna Temple): ஒரு நாளில் 2 நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசயக் கோவில்! கருவறை கதவு திறக்கும்போது, அர்சகர் கையில் கோடரியுடன் இருப்பார்!
ஆலிலையில் மீது துயிலும் மாதவனை தம் வீட்டு குழந்தையாகவே மக்கள் எண்ணி இன்றளவும் அவனை கொஞ்சி மகிழ்ந்து வருகின்றனர்.
கார்மேகம் போன்ற நிறத்தை உடைய கிருஷ்ணனின் பால பருவ லீலைகள் பல உண்டு. அதனை எண்ணும் போதே மனம் நெகிழ்ந்து பரவசமடையும்.
அப்படிப்பட்ட கிருஷ்ணன் கம்சனை கொன்ற பின்பு சினமும், பசியும் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதே ஸ்வரூபத்துடன் இன்றும் காட்சியளிக்கும் இடமே திருவார்ப்பூ கிருஷ்ணன் கோவில்.
பசியுடன் இருக்கும் கிருஷ்ணன்!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோவில் திருவார்பு கிருஷ்ணன் கோவில் ஆகும்.
பஞ்ச பாண்வடர்கள் வனவாச காலத்தில் கிருஷ்ண விக்ரகம் ஒன்றை வழிபட்டு வந்ததாகவும். அப்படி வழிப்பட்ட விக்ரகத்தை வனவாசம் முடிந்த பின் மக்களின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே கொடுத்து விட்டு சென்றதாகவும் கூறுகின்றனர்.
இங்கே கிருஷ்ணன் நான்கு திருக்கரங்களுடன் வலது கையில் உணவுடன் காட்சி தருகிறார். பின் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி உள்ளார். கடற்கரையில் மீனாட்சி ஆற்றின் கரையில் கோவில் உள்ளது.
கிருஷ்ணன் கம்சனை கொன்ற பிறகு சினமும் பசியும் தீராமல் இருந்த ஸ்வரூபமாக இங்கு உள்ளதாக கருதப்படுகிறது. எனவே இங்கே கிருஷ்ணன் எப்போதும் பசியுடனே இருப்பதாக நம்பப்படுகிறது.
2 நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசயக் கோவில்!
உலகில் வேறு எங்கும் இல்லாத வண்ணம் ஒரு நாளில் 2 நிமிடம் மட்டுமே கருவறை மூடப்படுகிறது. காரணம் கிருஷ்ணன் எப்போதும் பசியோடு இருப்பதால் அவருக்கு உணவு வழங்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.
கிருஷ்ணனின் அபிஷேகத்தின் போதும் தலை முதலில் உலர்த்தப்படும். பின் உஷா பாயசம் நைவேத்தியம் வழங்கப்படும். அதன் பின்பே உடல் உலர்த்தப்படுகிறது.
கால பைரவாஷ்டமி 2020: சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர் திருக்கோவில்!
இவ்வாறு அனைத்து நேரங்களிலும் கிருஷ்ணன் பசியோடு இருப்பதினால் கோவில் மூடப்படுவதே இல்லை.
23.58×7 என்ற கணக்கில் வருடம் 365 நாட்களும் திறந்து இருக்கும். சூரிய, சந்திர கிரகணத்தின் போதும் திறந்தே இருக்கும்.
ஒரு முறை கிரகணத்தின் போது கருவறை மூடப்பட்டு திறந்த போது மூலவரின் இடுப்பில் இருந்த ஆபரணங்கள் விழகி இருந்தது. இடுப்பில் ஆடைகள் தளர்ந்து இருந்தது.
இதனை கண்ட ஆதி சங்கரர் கிருஷ்ணன் பசியோடு இருப்பதால் தான் இப்படி ஆனது என்று கூறினார். அன்றிலிருந்து கிரகணத்தின் போதும் கோவில் மூடப்படுவது இல்லை.
இரண்டு நிமிடங்கள் கழித்து திறக்கும் போது அர்ச்சகர் கையில் கோடாரியோடு திறப்பார். காரணம் ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்க தாமதம் ஆனால் கோடாரி துணையோடு கதவை உடைக்க அனுமதி உண்டு.
கிருஷ்ணன் குழந்தையல்லவா பசி தாங்கமாட்டார் என்பதற்காக தான் இந்த நடைமுறை. நடை சாத்தப்படுவதற்கு முன் அர்ச்சகர் வெளியே வந்து “ இங்கே யாராவது பசியோடு இருக்கின்றீர்களா?” என்று கேட்பார்.
அப்போது நாம் சென்று அந்த பிரசாதத்தை வாங்கி உண்டால் வாழ்நாள் முழுவதும் பசிப்பிணி இருக்காது.
நள்ளிரவு 2 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கேரளாவில் 2 மணிக்கு திறக்கப்படும் கோவில் இது ஒன்று தான் என்று கூறப்படுகிறது.
பக்தர்கள் தரிசன நேரம்: இரவு 2 முதல் நன்பகல் 1 வரை. மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.
அமைவிடம்: Thiruvarppu Krishna Temple கேரள மாநிலம் கோட்டையத்தில் இருந்து வடமேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருவார்ப்பு என்ற இடத்தில் உள்ளது.