Home விளையாட்டு பியூஸ் சாவ்லா சிக்ஸ்; அடித்த அடியில் கண்ணாடி உடைந்தது

பியூஸ் சாவ்லா சிக்ஸ்; அடித்த அடியில் கண்ணாடி உடைந்தது

0
334
பியூஸ் சாவ்லா

பியூஸ் சாவ்லா சிக்ஸ்; அடித்த அடியில் கண்ணாடி உடைந்தது

வருகிற மார்ச் 29ம் தேதி 13 வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் 8 அணிகள் வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மார்ச் 2-ஆம் தேதி டோனி மற்றும் ரெய்னா சென்னை வந்தனர்.

மார்ச் 3-ஆம் தேதியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு, பியூஸ் சாவ்லா போன்றவர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தோனி பயிற்சி ஈடுபடுவதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது

சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் பியூஸ் சாவ்லா 6.25 கோடிக்கு சென்னை அணி இந்த வருடம் ஏலத்தில் வாங்கியது.

சுழற்பந்து வீச்சாளாருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வாங்க வேண்டுமா என்று விமர்சனங்கள் எழுந்தது. ப்யூஷா சாவ்லாவுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் எழுந்தது.

பியுஷ் சாவ்லா சிக்ஸ் 

நேற்று பயிற்சியின்போது பியூஸ் சாவ்லா பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். இதில் பந்துவீச்சாளர் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கி மைதானத்தில் உள்ள கண்ணாடி உடையும் அளவிற்கு அற்புதமான ஷாட் ஒன்றை அடித்தார்.

சேப்பாக்கம் மைதானத்தில் கண்ணாடி ஒன்று உடைந்தது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சமூக வலைதளங்களில் பியூஸ் சாவ்லா தற்போது பேசும் பொருளாகி வருகிறார்.

இதை தோனியும் ரெய்னாவும் அசந்து பார்த்தார்கள். கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் லில் பியூஸ் சாவ்லா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here