Kapildev New look: கபில் தேவின் புதிய தோற்றம். கபில் தேவ் பற்றி அறியாதவர் மிகவும் அரிது, இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக்கோப்பையை பெற்று தந்த கேப்டன்.
அதுமட்டும் அல்லாமல் அவர் மிகவும் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுபவர், போர்குணம் கொண்டவர்.
ஆடுகளத்தில் மட்டும் அல்லாமல், களத்திற்கு வெளியேவும் பல சாகசங்களை செய்ய வல்லவர். அதிலும் அவரின் நேர் காணல்கள் மிகவும் அருமையாக இருக்கும், அவரின் தன் நம்பிக்கை அதில் மிளிரும்.
அவர் கிரிக்கெட் ஆடும் காலகட்டத்தில் அவரின் “கர்லி“ ஹேர் ஸ்டைல் மிக பிரபலம். அவரின் கோட்டு சூட்டுகள் சில நேரங்களில் விமர்சனங்களையும், பல நேரங்களில் பாராட்டுகளையும் பெறும்.
Kapildev New look
தற்போது 61 வயதாகும் கபில் தேவ், ஒரு புதிய தோற்றத்தில் தென்படுகிறார். சில தினங்களுக்கு முன்னர் அவரின் நண்பர் சேட்டன் ஷர்மா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மொட்டைத் தலையுடன், வெள்ளைத்தாடி வைத்து கருப்பு நிற கோட்டில் கெத்தாகக் காட்சி அளிக்கிறார் .
இதை நமது நெட்டிசன்கள் பின்வருமாறு கொண்டாடி மகிழ்கின்றனர். “இந்திய தானோஸ்“, “விவின் ரிச்சர்ட்ஸ் போல தோற்றம் அளிக்கிறீர்“, (சிவாஜி) “கபில் ஜி த பாஸ்”, கட்டப்பா கபில் தேவ் என புகழ, கபிலோ “இது எனது கொரோனா தனிமை கெட்டப்“ எனக் கூறியுள்ளார்.
சா.ரா