ஜாம்பவான் விவியன் ரிச்சார்ட்ஸ் பிறந்த நாள் இன்று.
1975 மற்றும் 1979 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையை இரண்டு தடவை தொடர்ந்து வாங்கி கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வந்தது.
அந்த அணியில் ஒரு வீரராக இருந்து, அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் தான் விவியன் ரிச்சார்ட்ஸ்.
இவரது முழுப்பெயர் ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சார்ட்ஸ்.
பிரிட்டிஷ் லிவார்டு ஐலாந்தில் (இன்றைய வெஸ்ட் இண்டீஸ்) உள்ள செயின்ட். ஜான் நகரில் மால்கோம் மற்றும் கீரிடல் ரிச்சார்ட்ஸ்க்கு பிறந்தவர் தான் விவியன் ரிச்சார்ட்ஸ்.
121 டெஸ்ட் மற்றும் 187 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 15261 ரன்கள் சேர்த்துள்ளார்.
இரண்டு வகையான போட்டிகளையும் சேர்த்து 35 சதங்கள் மற்றும் 90 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இவரின் டெஸ்ட் சராசரி 50.00, ஒருநாள் சராசரி 47.00 வைத்துள்ளார்.
ஆல்ரவுண்டராக வலம் வந்த இவர் பந்து வீச்சிலும் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்டில் அதிகபட்சமாக 291 ரன்னும், ஒருநாள் 189 ரன்னும் அடித்துள்ளார்.
கேப்டனாக 50 போட்டிகளில் 27வெற்றி 8 தோல்வி கண்டுள்ளார்.
1984 மற்றும் 1991 ஆண்டு வரை வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக திகழ்ந்தார்.
முதல் தர போட்களில் 100சதங்கள் அடித்த நான்கு வீரர்களில் இவரும் ஒருவர்.
1976, 1977, 1980, 1981, 1982, 1986 ஆண்டுகளில் இறுதிவரை தரவரிசையில் முதல் இடத்தில் இருந்துள்ளார்.
விஸ்டன் பத்திரிகை வெளியிட்ட 150 வருட டெஸ்ட் வீரர்களில் இவரும் இடம் பிடித்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டிகுவாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டில் 56 பந்துகளில் 100 சதம் அடித்தது, டெஸ்ட் அதிவேக சதத்தில் முதலிடத்தில் 28 வருடமாக இருந்து வந்தது, 2014 ஆம் ஆண்டு மிஸ்பாக் உள் ஹாக் முறியடித்தார்.
அதிவேகமான ஒரு நாள் போட்களில் 1000 ரன்களை (21 இன்னிங்ஸ்) கடந்த வீரர்களில் முதலிடத்தை ஐந்து வீரர்களுடன் பகிரந்து வருகிறார்.
ஒரு நாள் போட்களில் நான்காவது வீரராக களமிறங்கி தனிநபர் அதிக ரன் எடுத்ததில் (189* ரன்கள்) இன்றளவும் இவர் முதலிடத்தில் உள்ளார்.
இவரை பெருமை படுத்தும் விதமாக 2007 ஆம் ஆண்டு உலககோப்பையில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற போது ஆண்டிகுவாவில் உள்ள நாரத் சவுண்ட் நகரில் சர்வதேச மைதானத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
இவர் சர்வதேச கால்பந்து போட்டியில் ஆண்டிகுவா ம்றறும் பார்போடஸ் அணிக்காக தகுதி சுற்றில் விளையாடியுள்ளார்.
இவரின் மனைவி பெயர் மரியம், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
2009 ஆம் ஆண்டு ஐசிசி யின் “கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபோம்” விருதை வாங்கியுள்ளார்.
இவர் இன்று தன்து 67 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.