தாராள பிரபு; ஸ்பெர்ம் டொனேட் செய்யலாமா? விக்கி டோனர் படத்தின் ரீமேக்
ஸ்பெர்ம் டொனேட் செய்யலாம் என்பதை மையப்படுத்தி உருவாகி வரும் படம் தாராள பிரபு (Dharala Prabhu). Dharala Prabhu Sneak Peek வீடியோ.
தாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் Dharala Prabhu Sneak Peek வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் Harish Kalyan. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ரொமாண்டிக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ரைசா நடித்திருந்தார். படத்தில் திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், அதில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார். இறுதியில், மீண்டும் ரைசா உடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வார்.
இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இது போன்ற ஒரு காதல் கதையை மையப்படுத்திய படத்தில் நடித்தார்.
ஆம், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த ரொமாண்டிக் த்ரில்லர் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.
காதல் ரொமாண்டிக் காட்சியை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். தற்போது, இந்தப்படத்தில் நடித்துள்ளார்.
விக்கி டோனர் படத்தின் ரீமேக்
இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தாராள பிரபு.
வரும் 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப் படம் விந்து தானம் செய்வதையும், செய்த பிறகு அதனால், ஏற்படும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஹரிஷ் கல்யாண், விவேக் ஆகியோரது காட்சி இடம்பெற்றுள்ளது.
படத்தில் வேண்டுமென்றால் விந்து தானம் Donate Sperm Sells செய்து கொள்ளலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.
விந்து தானத்தை மையப்படுத்தி ஹிந்தியில் வெளியான படம் விக்கி டோனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக தாராள பிரபு படம் உருவாக்கப்பட்டுள்ளது.