மகளிர் உலகக்கோப்பை: கபாலியாக மாறிய ஷாபாலி. இந்திய வீரர் வீரேந்திர சேவாக் போன்று அதிரடியாக விளையாடி வருகிறார் ஷாபாலி வர்மா.
இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தியா தனது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்தை தொடர்ச்சியாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்த மூன்று ஆட்டங்களில் முதலில் பேட் செய்த இந்திய வீராங்கனைகள் ரன்கள் சேர்க்கத் திணறினார்கள். ஆனால் மூன்று ஆட்டத்திலும் அதிரடியாக ஆடியவர் 16 வயதே ஆன ஷாபாலி வர்மா.
கடந்த வருடம் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஷாபாலி, மொத்தம் 17 ஆட்டங்களில் ஆடியுள்ளார். 438 ரன்கள் குவித்து, அதிகபட்சமாக 73 ரன்கள் சேர்த்துள்ளார்.
இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 147 ஆகும். இவரே மகளிர் இருபது ஓவர் போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீராங்கனை ஆவார். இதுவரை 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
சேவாக்கை பார்ப்பது போல் இருந்தது இவரது ஆட்டம். இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தனது முதல் பந்திலேயே பவுண்டரி விரட்டி ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்.
மகளிர் அணி சேவாக் என்று கூட சொல்லலாம் இந்த ஷாபாலியை. இந்த உலகக்கோப்பையில் கபாலியாக மாறி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்று இருக்கிறார்.
முதல் ஆட்டத்தில் 29 (15), இர்ணடாவது ஆட்டத்தில் 39 (17), மூன்றாவது ஆட்டத்தில் 46 (34), மித்தாலி ராஜ் ஒருநாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டிலிருந்து டி20 போட்டியில் விளையாடமல் இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த ஷாபாலி தன் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
மகளிர் கிரிக்கெட் போட்டி மந்தமாக ரன் சேர்ப்பார்கள், சுவாரஸ்யமாக இருக்காது என்று ரசிகர்கள் மனதில் எண்ணம் உண்டு. அதைத் தகர்த்து வருகிறார் நம்ம கபாலி ஷாபாலி.
உலககோப்பையில் மூன்று ஆட்டங்களில் இரண்டு போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.