முதல்முறையாக கோப்பையை வெல்லலாம் என நினைத்திருந்த நியூசிலாந்து கனவை தகர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்ற நாள் இன்று.
2015 உலககோப்பை
2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை நடத்தியது.
14 அணிகள் இந்த உலகக்கோப்பையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடியது.
பிரிவு ‘ஏ’ வில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பிரிவு ‘பி’ இல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறறது.
காலிறுதி ஆட்டங்கள்
லீக் சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எந்த ஒரு போட்டியில் தோல்வி அடையாமல் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
அடுத்து நடந்த காலிறுதி போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அரையிறுதிப் போட்டிகள்
முதல் அரையிறுதியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடர்ந்து ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நியூசிலாந்து அணி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டி
மார்ச் 29ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 93 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் இறுதிப்போட்டி தொடங்கியது.
நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து சொதப்பல்
ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே பிரண்டன் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி நியூசிலாந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
39 ரன்கள் எடுப்பதற்குள் நீலாங்கரை 3 விக்கெட்டை இழந்தது. அடுத்து ராஸ் டைலர் மற்றும் எலியட் இணைந்து அணியை மீட்டனர்.
நியூசிலாந்து அணி 150 ரன்கள் இருக்கும்பொழுது ராஸ் டைலர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
33 ரன்கள் 7 விக்கெட்
நியூசிலாந்து அணி 250 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட போது 45 ஓவர்களில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அந்த அணி கடைசியாக 33 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது
அந்த அணியும் எலியட் 83, ராஸ் டைலர் 40 டன்கள் என அதிகபட்சமாக எடுத்தனர். நியூசிலாந்து அணியில் 6 வீரர்கள் சொற்ப ரன்னில் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் மிட்செல் ஜான்சன் தலா 3 விக்கெட்டும் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா வெற்றி
184 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 33.1 அவர்களின் 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து உலகக் கோப்பை கனவை தகர்த்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 74 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 56 ரன்கள், டேவிட் வார்னர் 45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
ஐந்தாவது முறையாக
ஆஸ்திரேலியா அணி 1987, 1999, 2003, 2007 என ஏற்கனவே நான்கு முறை உலகக்கோப்பையை வென்று இருந்தது.
ஐந்தாவது முறையாக தன் சொந்த மண்ணில் மைக்கேல் கிளார்க் கோப்பையை கையில் ஏந்தி மற்ற வீரர்களுடன் மைதானத்தில் வலம் வந்தார்
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதன் மூலம் 5 முறை உலக கோப்பை வென்று அதிக முறை உலகக்கோப்பையை வென்ற அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி அதற்கு ஏற்றார்போல் பேட்டிங்கில் விளையாடாதது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும்.
ஆஸ்திரேலியா அணியின் ஜேம்ஸ் பால்க்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய மிச்செல் ஸ்டார்க் தொடர்நாயகன் விருதையும் வென்றார்.