Home சினிமா கோலிவுட் Corona Relief Funds: அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி, பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி!

Corona Relief Funds: அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி, பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி!

0
307
Corona Relief Funds

Corona Relief Funds: அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி, பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி! கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ. 25 கோடி, பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.

அக்‌ஷய் குமார் ரூ.25 கோடியை கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டும், டுவிட்டர் வாயிலாகவும் விழிப்புணர்வு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அண்மையில், கொரோனா வைரஸ் குறித்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ. 25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவரைப் போன்று பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடியும், ராம் சரண் ரூ.70 லட்சம், வருண் தவான் ரூ.30 லட்சம் வழங்கியுள்ளனர்.

மேலும், மகேஷ் பாபு ரூ.1 கோடி, கபில் சர்மா ரூ.50 லட்சம், அல்லு அர்ஜூன் ரூ.1.25 கோடி, பவன் கல்யாண் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.

ஆனால், இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு தொழிலதிபர் டாடா குழுமத்தைச் சேர்ந்த ரத்தன் நவால் டாடா ரூ.500 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து மற்ற பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here