Home வரலாறு கிரிக்கெட் ரிவைன்ட் : உலக கோப்பையை இலங்கை தொட்ட நாள் இன்று

கிரிக்கெட் ரிவைன்ட் : உலக கோப்பையை இலங்கை தொட்ட நாள் இன்று

327
0

உலக கோப்பையை இலங்கை தொட்ட நாள் இன்று

கத்துக்குட்டி இலங்கை

சிலோன் அணி என்ற பெயரில்  1926-27 ஆம் ஆண்டு விளையாடிய இலங்கை அணி. 1982 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தை பெற்று கத்துக்குட்டி அணியாக வலம் வந்தது.

1975, 1979, 1983, 1987, 1992-ஆம் ஆண்டு உலககோப்பையில் பெரிதாக வெற்றிகள் பெறாமல் லீக் போட்டியோடு வெளியேறியது இலங்கை.

1996 உலககோப்பை

இந்தியா பாகிஸ்தான் இலங்கை மூன்று நாடுகளும் இணைந்து 1996 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தியது.

அர்ஜுனா ரணதுங்கா கேப்டனாகவும் அரவிந்த டீ சில்வா துணை கேப்டனாகவும் களமிறங்கிய இலங்கை அணியில் ஜெயசூர்யா, அட்டப்பட்டு, முரளிதரன், உபுல் சந்தனா,  சமந்தா வாஸ், குமார் தர்மசேனா போன்ற ஜாம்பவான்கள் விளையாடினார்கள்.

இந்திய அணி

அந்த காலகட்டத்தில் முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்து வந்தது. சொந்த மண்ணில் உலக கோப்பை நடைபெறுவதால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளில் ஏதாவது ஒரு அணி வெற்றிபெறும் என நினைத்தார்கள்.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி நடப்பு சாம்பியன் அணியாக களமிறங்கியது. அந்த அணியில் வாசிம் அக்ரம் தலைமையில் வக்கார் யூனிஸ், சைய்து அன்வர், ஜாவித் மியாண்டட், சொக்லைன் முஸ்தாக், இன்சமாம் உல் ஹாக் போன்ற வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆஸ்திரேலியா அணி

கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத ஜாம்பவானான ஆஸ்திரேலியா அணியில் மார்க் டெய்லர் தலைமையில் மார்க் வாக், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன், மைக்கேல் ஸ்லேட்டர், ஸ்டார்ட் லா, கிளன் மெக்ராத்,  டேமியன் பிளமிங் போன்றவர்கள் களமிறங்கினார்கள்.

அனைவரும் எண்ணியது இந்த தடவை கண்டிப்பாக ஆஸ்திரேலியா  கோப்பையை வெல்லும்.

மும்பை பாதுகாப்பு

மும்பையில் நடந்த லீக் போட்டியில் இலங்கையும் ஆஸ்திரேலியா மோதுவதாக இருந்தது, ஆனால் மும்பையில் பாதுகாப்பு அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா அணி விளையாட மறுத்தது.

இதனால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு லீக் போட்டியில் உலக கோபபையை நடக்கும் இந்தியாவும் இலங்கையும் மோதியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை அணியை வீழ்த்தியது.

இந்த தொடர் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் தனது முழு திறமையுடன் விளையாடி தொடர்ந்து லீக் போட்டிகளில் இரண்டு சதங்கள் இரண்டு அரை சதங்கள் எடுத்தார்.

அரையிறுதி போட்டிகள்

இந்த உலக கோப்பையில் தான், முதல்முறையாக 12 அணிகள் பங்கு பெற்றது இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்ற ஐந்து அணிகளுடன்  விளையாட வேண்டும்.

பிரிவு ‘ஏ’ வில் இலங்கை அனைத்து போட்டியிலும் வென்று முதலிடத்தை பெற்றது.

இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது.

முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணி  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.

பல சர்ச்கைகளுடன் போட்டி முடிவுக்கு வந்தது ரசிகர்கள் செய்த குழப்பத்தால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டது. ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதி போட்டி

மார்ச் 17 ஆம் தேதி 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் கடாபி மைதானத்தின் 63 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் இறுதிப்போட்டி தொடங்கியது.

மூன்றாவது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் முதன் முறையாக சந்திக்கும் இலங்கை அணியை எதிர்கொண்டது.

டாசில் வென்ற அர்ஜுனா ரணதுங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.

மார்க் டெய்லர் பெறுமை

ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய மார்க் டெய்லர்  74 ரன்னும், ரிக்கி பாண்டிங் 45 ரன்னும், மைக்கேல் பெவன் 36 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணியின் அரவிந்த் டி சில்வா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது.

ரனதுங்கா சதம்

இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை அணி.

இலங்கை தரப்பில் அதிக பட்சமாக துணைக் கேப்டன் அரவிந்த டீ சில்வா சதமடித்து 107 ரன்கள் எடுத்தார், குரு சிங்கா 62 ரன்கள், ரணதுங்கா 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பிளம்மிங் மற்றும் ரைபிள் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

விருதுகள்

ஆட்ட நாயகன் விருதை அரவிந்த டீ சில்வா வென்றார் தொடர் நாயகன் விருதை சனத் ஜெயசூர்யா தட்டிச் சென்றார்.

இந்திய ரசிகர்கள் அப்போது இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இலங்கையின் அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் கோப்பையை அந்த அணி பெற்ற நாள் இன்று

Previous articleJyothika: பொன்மகள் வந்தாள் இசை வெளியீட்டு விழா ரத்து!
Next articleஇன்று புனீத் ராஜ்குமார் பிறந்தநாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here