#DCvsKKR நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதியது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்தது.
சுப்மன் கில், ரஸல் இருவரும் டெல்லி பவுலர்களுக்கு மிகவும் சவாலாக விளங்கினர். ரஸல் எப்படிப்பட்ட பவுன்சர் என்றாலும் குனிந்துகொண்டே சிக்சர் விரட்டினார்.
சுப்மன் கில் 65, ரஸல் 45, உத்தப்பா 28 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய டெல்லி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.
ரிசப் பாண்ட் 46 ரன்கள் இருந்தபோது சிக்சர் அடிக்க முயன்று எல்லைக்கோடு அருகில் கேட்ச் ஆனார். இதனால் அரைச்சதம் அவரால் அடிக்க முடியவில்லை.
ஷிக்கர் தவான் கடந்த போட்டிகளில் பெரிய அதிரடி ஆட்டம் ஒன்றையும் வெளிப்படுத்தாமல் இருந்தார். இன்று கொல்கத்தா பவுலர்களை தவிடுபொடியாக்கி விட்டார்.
3 விக்கெட்டுகள் பறிகொடுத்த டெல்லி அணியை 18.5 ஓவரிலேயே 180 ரன்னை எட்ட வைத்து வெற்றி தேடித்தந்துவிட்டார்.
ஆனால் 97 ரன்களுடன் நாட்அவுட் பேட்ஸ்மேனாக சதம் அடிக்க முடியாமல் சோகத்துடன் சென்றார். அதற்கு மேல் அடிக்க ரன்கள் இல்லையே தவான்.