Home அரசியல் சீமானை வெறித்தனமாக அடித்துக் கொலை செய்ய முயலும் கமல் – வீடியோ

சீமானை வெறித்தனமாக அடித்துக் கொலை செய்ய முயலும் கமல் – வீடியோ

1026
0
சீமானை கமல்

மோடி, ராகுல், ஸ்டாலின், பன்னீர் செல்வம், சீமான், எச்.ராஜா ஆகியோர் பேசும்போது ஆக்ரோசமாக டிவியை உடைத்து கமல் புதிய யுக்தியுடன் பிரச்சாரம் செய்துள்ளார்.

தேர்தல் நெருங்க நெருங்க கட்சித் தலைவர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு சென்றுகொண்டு உள்ளது.

இன்று நடந்த திமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை உதவாக்கரை என ஓப்பனாக பொதுமேடையில் திட்டினார் ஸ்டாலின்.

கமல் ஒருபடி மேலே சென்று கட்சித்தலைவர்கள் பேசும்போது ஓங்கி அடித்து கொலை செய்வது போன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த கலைஞரின் மகனாக இருக்கக் கூடிய நான் சொல்லுகிறேன் என முக ஸ்டாலின் ஆடியோவுடன் துவங்குகிறது அந்த வீடியோ.

ஸ்டாலினைத் தொடர்ந்து மோடி, ராகுல், பன்னீர் செல்வம், சீமான், எச்.ராஜா என நீள்கிறது அந்த ஆடியோ பட்டியல்.

எச்.ராஜா ஆண்டி இந்தியன் எனக் கூறிய உடனே கமல் ஆக்ரோசமாக அந்த ஆடியோ ஒலித்த டிவி பெட்டியை ரிமோட் கொண்டு அடித்து உடைக்கிறார்.

நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என ஒரு விழிப்புணர்வு வீடியோ போன்று பேசிவிட்டு இறுதியாக டார்ச்லைட் சின்னத்தை காட்டிவிட்டார்.

வீதி வீதியாக, மேடை மேடையாக கூவவதை விட சமூக வலைதளங்களில் புரட்சியை ஏற்படுத்தி இளைஞர்களை கவர திட்டமிட்டே இந்த வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

சீமானின் தொண்டர்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று  சினிமாவை மிஞ்சும் அளவிற்கு வீடியோ தயாரித்து வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.

Previous articleCSK vs RR: மங்குனி அம்பயரை அரட்டிய தோனி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்
Next article#DCvsKKR கொல்கத்தாவை தவிடுபொடியாக்கிய தவான்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here