ஷார்ஜாவில் சச்சின் என்னும் புயல் !
சச்சின் டெண்டுல்காரின் வியக்கத் தக்க ஆட்டங்களில் ஷார்ஜா மணல் புயல் என்று வர்ணிக்கப் படும் ( Desert Strom ) ஏப்ரல் 22 , 1998 மேட்ச் மிக மிக பிரசித்தம் !
இந்தியா , நியூஸிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபெற்ற கோகோ-கோலா கோப்பை துபாய் ஷார்ஜாவில் நடைப்பெற்றது 1998 ஆம் ஆண்டு .
அந்த தொடர் முழுவதிலும் சச்சின் மிக அருமையாகவே விளையாடி வந்தார் .
இந்திய அணி இறுதிப் போட்டியில் பங்குபெற ரன் ரேட் பெரிய தடையாக இருந்தது .
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 284 ரன்கள் குவித்தது…
அந்த தொடரின் இறுதி லீக் போட்டியில் இந்திய அணி 46 ஓவர்களில் 237 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம்.
அநேகரும் நியூஸிலாந்து அணி தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் என்று எண்ணினர் , ஆனால் நடந்ததோ வேறு !
சச்சின் தனது உச்சக்கட்ட அதிரடியை அன்று காமித்தார் !
ஆம் பிளெமிங் , காஸ்ப்ரோவிஸ் , மூடி , வார்னே என அனைவரின் பந்து வீச்சையும் ஒரு கைப்பார்த்து விட்டார்.
ஒருபுறம் கங்குலி , மோங்கியா , அசார் , ஜடேஜா என விக்கெட்கள் சரிய சச்சினோ தனி ஆளாக அடித்து நொறுக்கினார்.
அனைவரும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுமா என்று நினைத்த நேரத்தில் போட்டியையே வெல்ல வாய்ப்பு அமையும் வரை அடித்து நொறுக்கினார்.
குறிப்பாக 5 சிக்சார்கள் 9 போர்கள் குவித்து 143 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
“ இந்தியா போட்டியில் தோற்றது , சச்சின் பல உள்ளங்களை கவர்ந்தார் “ ! இந்த அருமையான சச்சினின் அதிரடி அரங்கேறியது இதே ஏப்ரல் 22 , 1998.
அந்த தொடரின் இறுதிப் போட்டியிலும் 132 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல பெரிதும் முனைந்தார் சச்சின்.
சச்சின் என்னும் புயல் ஷார்ஜாவை கலக்கி இன்றளவும் பல உள்ளங்களில் மையம் கொண்டுள்ளது.
சா.ரா